வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஜில்லா கலெக்டரை உதறி தள்ளிய சூப்பர் ஸ்டார்! வேட்டி சட்டைக்கு ஒத்துக் கொண்ட தலைவர்

Super star Rajini accepted traditional look in his film: சினிமாவில் கால் வைத்து அரை நூற்றாண்டை நெருங்கும் வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வயதான போதும், தலைவர் 171 வரை இளம் தலைமுறைகளுடன் போட்டி போட்டு நடித்து வருகிறார்.

1990 காலகட்டத்தில் நவரச நாயகன் கார்த்தி நடித்த பொன்னுமணி ஹிட் ஆனதை தொடர்ந்து கார்த்தியையும், சூப்பர் ஸ்டாரையும் இணைந்து நடிக்க வைக்க ஆர்வி உதயகுமார் முயற்சித்தார். ஆர்வி உதயகுமாரின் சின்ன கவுண்டரில் இம்ப்ரஸ் ஆன ரஜினி இயக்குனரை அழைத்து தனக்கான கதை ரெடி பண்ண சொல்லி உத்தரவிட்டார்.

தலைவருக்காக கதையை ரெடி பண்ணி அவருடன் கதை சொல்லும் போதே இயக்குனரை கட்டி அணைத்தார் தலைவர். அந்த அளவுக்கு பிரம்மாண்ட ஓபனிங் உடன் சூப்பர் ஸ்டாருக்கு மாஸான கதையை ரெடி பண்ணி இருந்தார் உதயகுமார். படத்தை தயாரிக்க ஏவிஎம் நிறுவனமும் ஒப்புக்கொண்டது.

Also read: பாட்ஷா பட ஸ்டைலில் நிவாரணம் வழங்கும் ரஜினிகாந்த்.. குருன்னு சொல்ற சிஷ்யனுங்க கத்துக்கோங்க!

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் “ஜில்லா கலெக்டர்”  படத்திற்கான பூஜை போடப்பட்டு படத்தின் டைட்டிலுடன் ஃபுல் பேமென்ட் உதயகுமாரிடம் வழங்கப்பட்டது. படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கவே படத்தின் பட்ஜெட் அதிகம், நடிகருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் என ஒவ்வொரு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் ஏவிஎம் நிறுவனமும், ரஜினியும் ஒன்றாக இணைந்து இப்படத்தை கைவிடுவது என முடிவு பண்ணினர். இதனால் இயக்குனர் ஆர் வி உதயகுமார் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளனார். பின் தலைவர் இயக்குனரிடம் “நீங்கள் ரஜினிக்காக படம் பண்ண வேண்டாம். உங்கள் படத்தில் நான் நடிக்கிறேன். அதாவது ஆர்வி உதயகுமாரின் கதையில் நான் நடிக்கிறேன்” என்று அவரது கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டார்.

படம் முடியும் வரை வேஷ்டி சட்டை தான் எனவும் தப்பி தவறி கூட ஜீன்ஸ் போடணும்னு அடம்பிடிக்க கூடாது எனவும் உத்தரவு போட்டார். மேலும் அந்த உத்தரவை இறுதிவரை கடைபிடித்து படத்தை சூப்பர் ஹிட் ஆக்கவும் செய்தார். இந்த படமே எஜமான்.

சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் மீனா, நெப்போலியன், ஐஸ்வர்யா, மனோரமா, நம்பியார், கவுண்டமணி, செந்தில் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். படத்தின் வசூலோ சக்கை போடு போட்டது. கிராமத்து சப்ஜெக்ட்டாக இருந்ததால் அன்று பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டு இப்படத்தை அதிக நாட்கள் மக்கள் திரையில் கொண்டாடினர்.

Also read: போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம்! ரஜினியின் திரை வாழ்க்கையில் தோள் கொடுத்த தூக்கிவிட்ட 6 இயக்குனர்கள்

Trending News