வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினியை பூஜை அறையில் வைத்து கும்பிட்ட விகே ராமசாமி.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

Super star Rajini helps VK Ramasamy: “தான் சம்பாதித்ததை சேர்த்து வைத்து விட்டு போறவன் முட்டாள்! தான் சம்பாதித்ததை தானே செலவழிக்கிறான் பார் அவன் தான் புத்திசாலி. ஆண்டவன் சொல்றான்! அருணாச்சலம் முடிக்கிறான்!” என்று சொல்லி தான் சம்பாதித்ததை தனக்கு மட்டும் இன்றி தன்னோடு இருப்பவர்களுக்கும் பகிர்ந்து அளித்தாரே இந்த கலியுக கர்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய அருமையான பதிவு இது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமாவின்  90 களின் காலகட்டத்தை  தனதாக்கி கொண்டார். அவர் நடித்தால் மட்டும் போதும். படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்ற நிலைக்கு ரசிகர்களை தனது ஸ்டைலால் கட்டி போட்டு  ஈர்த்திருந்தார் தலைவர்.

சுந்தர் சி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அருணாச்சலத்தில் ரஜினிகாந்த் உடன் சௌந்தர்யா, ரம்பா, வெண்ணிறாடை நிர்மலா, வடிவுக்கரசி, ஜெய்சங்கர், வி கே ராமசாமி, ரகுவரன், மனோரமா என நட்சத்திர பட்டாளங்கள் பல பேர் நடித்து இருந்தனர். சினிமாவை தாண்டி இப்படம் இயக்குனர் சுந்தர்சிக்கு மட்டுமன்று பலரது வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்திருந்தது.

Also Read: குருவிற்கு கூட நன்றி கடன் செலுத்த முதுகு எலும்பு இல்லாத கமல்.. இந்த விஷயத்தில் ரஜினி எவ்வளவோ பரவாயில்ல!

ஆம் இப்படத்தில் நடித்த வி கே ராமசாமி அவர்களை இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பழம்பெரும் நடிகரான வி கே ராமசுவாமி, ரஜினியின் ஆரம்ப காலங்களில், “நான் படம் தயாரிப்பேன் நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும்” என்றார். இதற்கு சம்மதித்தார் ரஜினி.

காலப்போக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது வெற்றி படங்கள் மூலம் உயரே போக, விகேராமசாமி யோ சினிமாவில் தான் எடுத்த தவறான முடிவுகளால் வறுமையின் கொடுமைக்கு தள்ளப்பட்டார். இதை நினைவு கூர்ந்த ரஜினி, விகே ராமசாமியை அருணாச்சலம் படத்தின் ஒன் ஆப் த ப்ரொடியூசர் ஆக்கினார்.

ஆனால் விகே ராமசுவாமி இடமிருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை. லாபத்தில் மட்டுமே பங்கு கொடுத்து அவரின் வாழ்வுக்கு உயர்வு கொடுத்தார் தலைவர். இதனால் வி கே ராமசாமி அவர்கள், ரஜினியின் படத்தை பூஜை அறையிலேயே வைத்து பூஜிக்க தொடங்கியிருந்தார். இந்த நிகழ்வை வீகே ராமசாமி கூறி தான் பலரும் அறிந்திருந்தனர்.

Also Read: பாட்ஷா பட ஸ்டைலில் நிவாரணம் வழங்கும் ரஜினிகாந்த்.. குருன்னு சொல்ற சிஷ்யனுங்க கத்துக்கோங்க!

Trending News