வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாழ வைத்த தெய்வங்களை வாட்டி வதைக்க முடிவு எடுத்து இருக்கிறாரா ரஜினி.. இளையராஜா போல் மாறிய சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முதலிடத்தில் இருக்கும் ஹீரோ. பொதுவாக ஒரு வயதுக்கு மேல் ஹீரோவாக ஒரு சில நடிகர்களால் நடிக்க முடியாது. ஆனால் ரஜினிகாந்த் கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோ ரோலில் மட்டுமே நடித்து வருகிறார். எண்பதுகளில் ஆரம்பித்து இன்றைய 2k கிட்ஸ் வரை இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.

பொதுவாக இந்திய சினிமாவை பொறுத்த வரைக்கும் எப்பேர்ப்பட்ட வெற்றி படத்தை கொடுத்திருந்தாலும் ஒரு காலத்துக்கு பின் அவர்களுடைய மவுசு குறைந்துவிடும். ஆனால் ரஜினிகாந்த் ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரைக்கும் அதே உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறார்.

Also Read: ஒரு வழியா அடுத்த இயக்குனரை லாக் செய்த ரஜினி.. அந்த ஒரு வார்த்தையால் சிலிர்த்து போன சூப்பர் ஸ்டார்

இதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். இன்றைய தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக இருக்கும் விஜய் மற்றும் நடிகர் அஜித்துக்கு இணையாக, ஏன் ஒரு படிக்கு மேலாகவே ரஜினிகாந்த் படங்களுக்கு வரவேற்பையும் முதல் நாள் முதல் ஷோவின் கொண்டாட்டத்தையும் ரஜினி ரசிகர்கள் கொடுக்க தவறியதே இல்லை.

இப்படி ரஜினியின் வெற்றியை தங்களுடைய வெற்றியாக நினைத்து வாழும் ரசிகர்களை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் ரஜினி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது ரஜினியுடைய பெயர், புகைப்படம், குரலை ஒப்புதல் இன்றி வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டா மட்டும் போதாது.. ரஜினி எடுத்த துணிச்சலான முடிவு, தயக்கம் காட்டிய விஜய்

பொதுவாக பார்த்தால் ரஜினியின் புகைப்படங்களையும், பெயரையும் அதிகமாக உபயோகித்துக் கொண்டிருப்பவர்கள் அவருடைய ரசிகர்கள்தான். ரஜினியின் புகைப்படம் இல்லாத ஆட்டோக்கள் இல்லை என்று கூட சொல்லலாம். மேலும் தங்கள் செய்யும் தொழிலுக்கு கூட ரஜினியின் பெயரை அவருடைய ரசிகர்கள் வைக்கிறார்கள்.

ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களை ‘என்னை வாழவைத்த தெய்வங்கள்’ என்று பொது மேடைகளில் சொல்லுவார். அப்படி இருக்கும் போது அந்த தெய்வங்களைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் சில வருடங்களுக்கு முன் இசைஞானி இளையராஜா செய்ததைப் போல் இவரும் செய்திருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

Also Read: ரஜினியின் மூன்று படத்தை ரீமேக் செய்ய ஏங்கும் தனுஷ்.. துரோகத்தால் நிறைவேறாமல் போகும் ஆசை

Trending News