திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இப்பவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரஜினியின் 10 படத்தின் வசனங்கள்.. அவரே எழுதி அதிரடி காட்டிய பஞ்ச் டயலாக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸான படங்கள் மற்றும் ஸ்டைலை தாண்டி ஒவ்வொரு படத்திலும் அவர் பேசும் பஞ்ச் வசனங்களுக்காகவே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். எத்தனை நடிகர்கள் பஞ்ச் டயலாக்குகள் பேசினாலும் சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே அதெல்லாம் மாசாகவும், கிளாஸாகவும் இருக்கும். இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்கள் இவருக்கு பஞ்ச் வசனங்கள் எழுதியது மட்டுமல்லாமல் ரஜினியே தனக்கான ஒரு அதிரடி வசனத்தை எழுதியிருக்கிறார்.

பாட்ஷா: ரஜினியின் வசனங்களிலேயே இன்று வரை பிரபலமாக இருப்பது பாட்ஷா படத்தில் வரும் “நா ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்னா மாறி” என்னும் வசனம் தான். ரஜினிக்கு இந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.

படையப்பா: ரஜினியின் படங்களிலேயே மெகா கலெக்சன் படம் என்றால் அது படையப்பா தான். இதில் ரஜினி படத்தின் பெரும்பாலான காட்சிகளில் “என் வழி தனி வழி” என்னும் வசனத்தை பேசியிருப்பார்.

முத்து: முத்து படத்தில் ரஜினி அதிகமாக அரசியல் சம்மந்தப்பட்ட பஞ்ச் டயலாக்குகளை பேசியிருப்பார். இந்த வசனங்களில், “நான் எப்போ வருவன், எப்படி வருவன் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவன்” என்னும் வசனம் பிரபலமானது.

Also Read: படம் பார்க்க மட்டும் நாங்கள் வேண்டுமா.? ஏமாற்றத்தைக் கொடுத்த ரஜினிகாந்த்

முள்ளும் மலரும்: இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினிகாந்த் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மாஸ், கிளாஸ் என்பதை தாண்டி சிறந்த நடிகன் என ரஜினிகாந்த் தன்னை நிரூபித்த படம் முள்ளும் மலரும். இதில் “கெட்ட பய சார் இந்த காளி” என்னும் வசனத்தை பேசியிருப்பார்.

பாபா: நடிகர் ரஜினிகாந்த் தயாரித்து, திரைக்கதை எழுதி நடித்த திரைப்படம் பாபா. இந்த படம் 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் “கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு” என்னும் வசனத்தை பேசியிருப்பார்.

அருணாச்சலம்: 90களின் இறுதியில் ரஜினிக்கு அடுத்தடுத்த அமைந்த ஹிட் படங்களில் அருணாச்சலம் படமும் ஒன்று. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினி “ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்” என்னும் வசனத்தை அதிக இடங்களில் பேசியிருப்பார்.

Also Read: பாபாவை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.. நாலாபுறமும் வாங்கும் கல்லடி

அண்ணாமலை: ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் இன்றைய கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களுக்கு கூட ரஜினியின் விருப்பமான படம் என்றால் அது அண்ணாமலை தான். இந்த படத்தில் ரஜினி கிளைமேக்சில் பேசும் ‘கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு கரெக்ட்டா வரும்’ என்னும் வசனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சந்திரமுகி: பாபா பட தோல்விக்கு பிறகு ரஜினி இனி நடிக்கவே மாட்டார் என வதந்திகள் கிளம்பிய நிலையில் அவர் சந்திரமுகி படத்தில் நடித்தார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், “நான் யானை இல்ல குதிரை” என்னும் வசனத்தை பேசி அரங்கத்தை அதிர செய்தார்.

கபாலி: இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம். இந்த படத்தில் “நான் வந்துட்டேன் சொல்லு திரும்ப வந்துட்டேன் சொல்லு” என்னும் வசனம் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

மூன்று முகம்: ரஜினிகாந்த் போலீசாக நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் மூன்று முகம். இந்த படத்தில் “தீப்பெட்டிக்கு இரண்டு பக்கம் உரசுனா தான் தீ பிடிக்கும், இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசுனாலும் தீ பிடிக்கும்” என்னும் வசனத்தை பேசியிருந்தார்.

Also Read: வில்லாதி வில்லனாக ரஜினி நடித்த 6 படங்கள்.. பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கிய பாலச்சந்தர்

Trending News