வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தலைவர் 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஏப்ரலில் படப்பிடிப்பை கன்ஃபார்ம் செய்த லோகேஷ்

Super star Rajini’s Thalaivar 171 official announcement: ஹாலிவுட் ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவை தரம் உயர்த்தி வரும் லோகேஷ் கனகராஜ். ஒரே மாதிரியான ஆக்சன் படங்கள், ஒவ்வொரு படத்திற்கும் வேறுபட்ட கோணம் என பல தந்திரங்களை செய்து படத்தைவெற்றி பெற வைப்பதில் கில்லாடி ஆவார். எப்பேர்பட்ட இரத்த சரித்திரம் ஆனாலும் நாயகன் வருவார், வந்து கப்பார் என வசூலிலும் ஸ்கோர் செய்து விடுவார் லோகேஷ் கனகராஜ்.

மாநகரத்தில் அறிமுகமாகி கைதியின் வெற்றிக்குப் பின் இமயம் என உயர்ந்த லோகேசை  தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் திரும்பி பார்த்தனர்.  கமலஹாசன் உடன் இணைந்த விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில் தொடர்ந்து விஜய் உடனான  இரண்டாவது படம் லியோவை இறக்கினார்.

விஜய் உடன் லியோ சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே சூப்பர் ஸ்டாரை அணுகிய லோகேஷ் தனது அடுத்த படத்திற்கான விதையை போட்டுவிட்டார். தலைவருக்காக அதிரடி ஆக்சன் கதையை ரெடி பண்ணி சூப்பர் ஸ்டாரை இம்ப்ரஸ் செய்தும் விட்டார்.

Also read: லியோ தோல்விக்கு இதுதான் காரணம் என செஞ்ச தப்பை ஒத்துக்கிட்ட லோகி.. தலைவர் 171க்கு போடும் ஸ்கெட்ச்

தலைவரும் தர்பார், அண்ணாத்த என  சிறிது தடுமாறி இருந்த நிலையில் ஜெயிலர் மூலம் கம்பேக் கொடுத்தார். கதை தேர்வில் கவனமாக இருக்கும் ரஜினி, ஜெய் பீம் புகழ் ஞான வேலுடன் தலைவர் 170 ஆனா வேட்டையனை முடித்த கையோடு தலைவர் 171யை  லோகேஷ் உடன் கன்ஃபார்ம் பண்ணிவிட்டார்.

மேலும் சிவகார்த்திகேயனை கை தூக்கும் விதமாக  அவரையும் இப்படத்தில்  நடிக்க வைக்க லோகேஷிற்கு அன்பு கட்டளை இட்டு விட்டார். லியோ படத்தை போன்று ரிலீஸ் தேதி சொல்லி அவசர அவசரமாக முடித்தது போல்  இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனான தலைவர் 171 இல் அந்த தவறு நேராதவாறு பயங்கரமாக ஸ்கெட்ச் போட்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வருகிறார் லோகேஷ்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தலைவர் 171 படப்பிடிப்பு துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகிவிட்டது. லோகேசின் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ள  தலைவர் 171க்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். மேலும் சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 கன்ஃபார்ம் ஆனதை தொடர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also read: போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம்! ரஜினியின் திரை வாழ்க்கையில் தோள் கொடுத்த தூக்கிவிட்ட 6 இயக்குனர்கள்

Trending News