Rajini: ரஜினி நடித்த ஜெயிலர் படம் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அவருக்கு ஆளுநர் பதவி கிடைக்குமா என சூப்பர் ஸ்டாரின் சகோதரர் சத்ய நாராயண ராவ் கூறிய பதில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ் இன்று மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
Also Read: 4 கார்களை ஆப்சனாக கொடுத்த கலாநிதி.. இதுதான் ஜாக்பாட் என கூச்சப்படாமல் வாங்கிய நெல்சன்
அப்போது அவரிடம் ரஜினிக்கு அரசியல் பதவி கிடைக்குமா எனக் கேட்டனர். உடனே அவர் ரஜினி இனிமேல் அரசியலுக்கு வர மாட்டார், ஆனால் அவருக்கு ஆளுநர் பதவி என்பது இறைவன் கையில் தான் இருக்கிறது என்று கூறினார். திடீரென்று ரஜினியை ஆளுநர் பதவியுடன் ஒப்பிட்டு பேசுவதற்கு காரணம் இருக்கிறது.
ஏனென்றால் அவர் சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றபோது திரும்பி வரும் வழியில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களை சந்தித்தார். அதிலும் உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் வாங்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
Also Read: ஒன்றரை கோடி காரு போதும், ரஜினி எடுத்த தடாலடி முடிவு.. வாங்கிட்டு நான் பிரச்சனையில சிக்க முடியாது
அது மட்டுமல்ல நேற்று சென்னையில் அவரை முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சந்தித்தார். இந்த நிலையில் ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில் ரஜினியின் சகோதரர் அளித்துள்ள பதில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ரஜினி இன்னும் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துவிட்டு ஓய்வு எடுக்கப் போவதால், அந்த சமயத்தில் அவருக்கு ஆளுநர் பதவியும் கிடைத்துவிடும். என்னதான் அரசியலுக்கு வராவிட்டாலும் ஆளுநராக மாறுவதுதான் சூப்பர் ஸ்டாரின் அடுத்த கட்டத்திட்டம். இந்த தகவலை அறிந்த பலரும் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அசால்ட் காட்டுகின்றனர்.
Also Read: கமல், ரஜினியை எல்லாம் ஓவர் டேக் செய்த ஷாருக்கான்.. மெய்சிலிர்க்க வைத்த கிங் ஆப் பாலிவுட்