ஸ்கூல் பீஸ் கூட கட்ட கஷ்டப்படும் சூப்பர் ஹிட் இயக்குனர்.. சம்பளம் கொடுக்காமல் டபாய்க்கும் ராதிகா சித்தி

ஒரு பக்கம் ஹீரோக்களுக்கு 150, 200 கோடிகள் என வாரி கொடுக்கும் தமிழ் சினிமா மறுபக்கம் சில சூப்பர் ஹிட் இயக்குனர்களை கண்டு கொள்ளாமல் இழுத்தடிக்கும் சினிமா. சில இயக்குனர்கள் மிகவும் ஸ்ட்ரீட் ஆபிசராக இருப்பார்கள். ஆனால் சிலர் கொடுத்ததை வாங்கிக் கொண்டு காலத்தை ஓட்டும் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

அப்படி தமிழ் சினிமாவில் பல பேர் தங்களுக்கு வரவேண்டிய பணத்தை கேட்காமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இப்பொழுது பிரபல இயக்குனர் ஒருவருக்கும் இதே நிலைமைதான் வந்துள்ளது. படத்தை முடித்துக் கொடுத்த அவருக்கு இன்னும் தயாரிப்பு நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளது.

வெயில், அங்காடித்தெரு, அரவான் என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் வசந்த பாலன். சமீபத்தில் கூட இவர் இயக்கிய அநீதி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ராதிகாவின் ராடன் பிக்சர்ஸ்காக ஜி5 ஓடிடி களத்திற்கு ஒரு வெப் சீரியஸ் பண்ணி உள்ளார்.

சம்பளம் கொடுக்காமல் டபாய்க்கும் ராதிகா சித்தி

வசந்த பாலன் சமீபத்தில் தலைமைச் செயலகம் என்ற ஒரு வெப் தொடர் பண்ணினார். அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்காக ராடன் பிக்சர்ஸிலிருந்து வசந்த பாலனுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லையாம். இந்த தொடரை வைத்து நன்றாக சம்பாதித்த போதிலும் இப்படி செய்துள்ளது அந்த நிறுவனம்.

ஏற்கனவே வசந்தபாலன் கொடுத்த பேட்டியில் என் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு கூட மிகவும் சிரமப்படுகிறேன் என தன்னுடைய கஷ்டத்தை தெரிவித்து இருந்தார். இப்படி சமீப காலமாக நலிவுற்று இருக்கும் வசந்த பாலனுக்கு உதவி செய்யாவிட்டாலும் அவர் இயக்கிய படத்திற்கு சம்பளத்தையாவது கொடுத்திருக்கலாம் என வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →