வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நைட் பார்ட்டியில் கலந்துகொண்ட பெரிய தலைகள்.. பொன்னியின் செல்வன் டீம் விடிய விடிய அடித்த கூத்து

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படம் மொத்தமாக 240 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படத்தை லைக்காவுடன் இணைந்து மணிரத்னம் தயாரித்திருந்தார்.

ஆகையால் பொன்னியின் செல்வன் வெற்றி பார்ட்டி தினந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் உச்சகட்ட பார்ட்டி இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளது. பிரபல ஹோட்டலில் லீலா பேலஸில் ஒரு நாள் முழுவதும் வாடகைக்கு எடுத்து விடிய விடிய தண்ணி பார்ட்டி நடந்துள்ளது.

Also Read: பொன்னியின் செல்வனால் மணிரத்தினத்தின் ஷேர் மற்றும் சம்பளம்.. அடேங்கப்பா! தளபதி விஜயை விட ஜாஸ்தியா இருக்கே

காலையில் 5 மணி வரை நடந்த தண்ணி பார்ட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பொதுவாக எல்லாருடனும்நெருங்கி பழகாத மணிரத்னம் கூட விடிய விடிய இருந்துள்ளார். அவர் போன பின்பு விடிந்த பிறகும் பார்ட்டி நடந்துள்ளது.

பொன்னியின் செல்வன் ஒட்டுமொத்தமாக எல்லா மொழிகளிலும் 429. 75 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் எல்லா ரைட்ஸுக்கும் சேர்த்து 189.75 போடி லாபம் கிடைத்தது. இப்படத்தின் பட்ஜெட் ஆன 240 கோடியில் 60 கோடியை மணிரத்தினம் இயக்குனராக இருந்ததற்காக சம்பளமாக பெற்றுள்ளார்.

Also Read: பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதியை லாக் செய்த மணிரத்னம்.. அடுத்த வசூல் வேட்டை ஆரம்பம்

இதனிடையே இத்திரைப்படத்தை தயாரித்த லைகா தயாரிப்பு நிறுவனம் கல்கி அவர்களின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும் படத்தின் லாபத்தில் ஒரு கோடியில் 30 சதவீதம் ஷேர் வைத்துக் கொண்டாலே 60 கோடி மணிரத்தினத்திற்கு கிடைத்து உள்ளது. மொத்தமாக பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்னத்திற்கு 120 கோடி கிடைத்துள்ளது.

ஆகையால் மணிரத்னம் உச்சகட்ட சந்தோஷத்தில் பட குழுவுடன் விடிய விடிய குடியும் கூத்துமாய் இருந்திருக்கிறார். மேலும் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டதால், அதை வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்து அதிலும் கை நிறைய லாபம் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read : பொன்னியின் செல்வன் வசூலில் கில்லி கொடுத்த தயாரிப்பாளர்.. பெரிய மனுஷன்னு நிரூபிச்சிட்டீங்க.!

Trending News