புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சூப்பர் ஸ்டார் புகழ் சரத்குமார் வில்லனாக நடித்த 5 படங்கள்.. மிஸ்டர் சென்னை வென்றதால் வந்த வாய்ப்பு

ஆரம்பகால கட்டங்களில் பாடி பில்டிங் மூலம் ஆணழகன் போட்டியில் பங்கேற்று மிஸ்டர் சென்னை பட்டத்தை வென்றவர் நடிகர் சரத்குமார். இதனைத் தொடர்ந்து சினிமா திரை உலகிலும் ஆரம்பத்திலேயே இவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெளிவந்த 5 திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

புலன் விசாரணை: இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு விஜயகாந்த் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் ஆகும். இப்படத்தில் சரத்குமார் சங்கர் என்னும் கதாபாத்திரத்தில் போலீஸ்க்கே தண்ணி காட்டும் வில்லனாக மாஸ் காட்டி இருப்பார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

Also Read: சுப்ரீம் பெருசா, சூப்பர் ஸ்டார் பெருசா.. கேள்வி கேட்டு வம்படியாக மாட்டிக்கொண்ட சரத்குமார்

ஜெகதலப்பிரதாபன்: இயக்குனர் சங்கர் கணேஷ் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு மைக் மோகன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இதில் தீவிரவாதி கும்பலை சேர்ந்தவராக சரத்குமார் திலீப் என்னும் கதாபாத்திரத்தில் கலக்கலாக நடித்துள்ளார். இதில் ஹீரோவுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் போராட்டங்களை மையமாக வைத்து அமைந்துள்ளது.

சந்தன காற்று: இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இசை அமைப்பில் 1990 ஆம் ஆண்டு விஜயகாந்த் உடன் கௌதமி இணைந்து நடித்திருப்பார். இப்படத்தில் நண்பர்களாக இருக்கக்கூடியவர்களே ஒரு கட்டத்தில் எதிரிகளாக மாறி பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு இருப்பது போன்று இக்கதையானது அமைந்துள்ளது. இதில் சரத்குமார் ராமு என்னும் கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக தோன்றி இருப்பார்.

Also Read: ரம்மி சரத்குமாரிடம் காதல் லீலையில் சிக்கிய 4 நடிகைகள்.. சினிமாவுக்கு கும்மிடு போட்டு ஓடிய ஹீரோயின்

உறுதிமொழி: 1990 ஆம் ஆண்டு உறுதிமொழி படத்தை ஆர் வி உதயகுமார் இயக்கி பிரபு மற்றும் சாந்தினி இணைந்து நடித்துள்ளனர். இதில் பிரபுவுடன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் சரத்குமார் தனது வில்லத்தனமான நடிப்பை காட்டி இருப்பார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

ராஜா கைய வெச்சா: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு பிரபு கௌதமி ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படமாகும். இந்தப் படத்திற்கு  இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் ஹீரோவுடன்  சரத்குமாருக்கு பல்வேறு விதங்களில் மோதல்கள் ஏற்படுகின்றது.

இவ்வாறு இந்த ஐந்து படங்களிலும் மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார் புகழ் சரத்குமார் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கூட விஜய்க்கு அப்பாவாக தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து இருப்பார்.

Also Read: 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த சரத்குமார் படங்கள்.. ஒவ்வொரு படமும் தரமாச்சசே!

Trending News