திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஷாருக்கான் மகளை வளைத்துப் போட்ட சூப்பர் ஸ்டாரின் மகன்.. பின்னணியில் இருக்கும் காரணம்

தற்போது பாலிவுட் திரையுலகை ஆட்சி செய்து வரும் கான் நடிகர்களில் ஷாருக்கானுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். எந்த அளவுக்கு இவர் பிரபலமாக இருக்கிறாரோ அதேபோன்று இவர் குறித்து பல சர்ச்சை செய்திகளும் அவ்வப்போது வெளிவரும். அதிலும் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் திரைப்படம் சமீபத்தில் எக்கச்சக்கமான பிரச்சனைகளை சந்தித்தது.

இருப்பினும் அது படத்திற்கு ஒரு இலவச பிரமோஷனாக அமைந்து விட்டது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் ஷாருக்கானின் மகள் சூப்பர் ஸ்டார் பேரனை காதலித்து வருவதாக ஒரு செய்தி பல மாதங்களாகவே மீடியாவை கலக்கிக் கொண்டிருந்தது.

Also read: ஷாருக்கான் கேட்டால் லிமிட்டே கிடையாது.. நன்றியை வேற லெவலில் காட்டும் திருமணம் முடிந்த தீபிகா

அந்த விஷயம் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதாவது ஷாருக்கானின் மகள் சுஹானா பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் பேரன் அகஸ்டியாவை காதலித்து வருகிறார். இவர் அமிதாப்பச்சனின் மகள் ஸ்வேதாபச்சனின் மகன். இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று சுஹானா ஸ்வேதா பச்சன் வீட்டு பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவர்கள் இருவரின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பார்ட்டியில் ஷாருக்கான் மகள் அனைவருடனும் சிரித்து பேசி மகிழ்ந்த போட்டோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also read: அந்தரங்க உடையில் ஆட்டம் போட்ட நடிகை.. அட்லி கூட சேர்ந்த நேரமோ என்னவோ சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்

இதுதான் தற்போது பாலிவுட்டின் முக்கிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் வாரிசுகளின் இந்த காதலுக்கு பின்னணியில் இருப்பது மூத்த தலைமுறைகள் தானாம். அவர்கள் தான் இந்த ஜோடியின் நட்பை காதல் வரை கொண்டு சென்றதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதற்குப் பின்னால் சில காரணங்களும் இருக்கிறது.

பொதுவாக இரு பெரிய குடும்பங்கள் சம்பந்தம் செய்து கொள்வதற்கு பின்னால் சில ஆதாயங்கள் இருக்கும். அப்படித்தான் கான் மற்றும் பச்சன் குடும்பங்கள் இணைந்து இருப்பதாக பாலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. அதனாலேயே பெரியவர்கள் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்களாம்.

Also read: அட்லீ மீது மன வருத்தத்தில் இருக்கும் ஷாருக்கான்.. காண்டாகி கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்

Trending News