புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மும்பையில் இருந்து கடும் கோபத்தில் வந்த ரஜினி.. மகளின் குளறுபடியால் நிம்மதி தொலைந்தது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கேலி, கிண்டலுக்கு உள்ளானது. அதாவது பிரியாணி கடை விளம்பரத்திற்கு உள்ளது போல ரஜினியின் போஸ்டரை வெளியிட்டு ஐஸ்வர்யா அசிங்கப்படுத்தி விட்டார் என ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனாலும் தனது மகளுக்காக ரஜினி இந்த படத்தில் நடித்து தான் வருகிறார்.

Also Read : 1000 கோடி முதலீடு, லைக்காவால் விழி பிதுங்கி நிற்கும் ரஜினி, அஜித்.. மரண அடி வாங்க போகும் டாப் ஹீரோக்களின் 4 படங்கள்

மேலும் லால் சலாம் படத்திற்காக கிட்டத்தட்ட 8 நாட்கள் மும்பையிலேயே ரஜினி தங்கி இருந்தார். இந்த படப்பிடிப்புக்காக தனது பிசியான வேலைகள் எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மகளுக்காக ரஜினி மும்பை சென்றிருந்தார். ஆனால் அங்கு ரஜினி மூன்று நாட்கள் மட்டும் தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.

மற்ற நாட்களில் எல்லாம் சும்மாவே இருந்துள்ளாராம். காரணம் என்னவென்றால் மகளின் நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது லால் சலாம் படத்தில் நடிக்கும் கோ ஆர்டிஸ் மற்ற நாட்களில் வரவில்லையாம். இதனால் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ரஜினி மும்பையில் சும்மாவே இருந்துள்ளார்.

Also Read : விக்ரம் பட ரோலக்ஸ் வாய்ப்பை தவறவிட்ட நடிகர்.. ரஜினியின் அடுத்த பிரம்மாண்ட படத்தின் வில்லன்

ஒரு இயக்குனர் சரியான திட்டமிடுதலுடன் இருந்தால் மட்டுமே படத்தை குறித்த நாட்களில் எடுக்க முடியும். மேலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு வீண் செலவு ஏற்படாது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ஸ்டார் ரஜினியின் கால்ஷூட் கிடைப்பது சாதாரண விஷயம் அல்ல. மற்ற இயக்குனரால் ரஜினிக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் அங்கு நடந்திருப்பதே வேறு.

ஆனால் தன்னுடைய மகள் என்பதால் வேறு எதுவும் செய்ய முடியாமல் கடும் கோபத்தில் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட வந்து விட்டாராம். மேலும் இனி எல்லாவற்றையும் பக்காவாக ரெடி செய்து விட்டு தன்னை கூப்பிடுமாறு மகளிடம் கரராக சொல்லி உள்ளாராம் ரஜினி.

Also Read : தயாரிப்பாளர்களை பெரியளவில் வாழ வைத்த 6 படங்கள்.. கமலை பார்த்து பொறாமை பட்ட ரஜினி

Trending News