புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஷங்கர் படத்தையே வேண்டாமென உதறிய சூப்பர்ஸ்டார்.. எனக்கே ஸ்கெட்ச்சா!

பான் இந்திய படங்கள் அதிகரித்து வரும் தற்போதுள்ள காலக்கட்டத்தில் மற்ற மொழி படங்களிலும் நடிக்க நடிகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இவ்வாறான படங்களில் நடிப்பதன் மூலம் தங்களுடைய மார்க்கெட்டை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதாலும் நிறைய நடிகர்கள் அவ்வாறான படங்களில் தொடர்ந்து ஒப்பந்தம் ஆகி வருகின்றனர்.

இந்தியன் 2 படம் நின்றுபோனதால், அந்த படம் மீண்டும் தொடங்குவதற்கு முன்னரே இயக்குனர் ஷங்கர் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் நாயகனாக நடித்து வருகிறார். எப்பொழுதும் அரசியல், ஊழல்களை மையமாக கொண்டு படம் இயக்கும் ஷங்கர் இதிலும் அவ்வாறான ஒரு கதையை கொண்டு இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தில் மிகுந்த ஊழல் புரியும், மோசமான ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தை வில்லனாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நடிக்க வைக்க பிரபல மலையாள நடிகர் மோகன்லாலை அணுகியுள்ளார் ஷங்கர். கதையை கேட்ட பிறகு தற்போது தனக்கு வில்லனாக நடிக்க விருப்பம் இல்லை எனக்கூறி மோகன்லால் அதனை மறுத்துள்ளார்.

மோகன்லாலை வைத்து மலையாளத்திலும் பிசினஸ் செய்து விடலாம் என எண்ணிய ஷங்கருக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பின்னர் அண்மையில் வெளியான மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு ஷங்கரை கவர்ந்ததால் தற்போது அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

கார்த்திக் சுப்பாராஜ் கதையைக் கொண்டு ராம் சரண், கீர்த்தி சனோன், அஞ்சலி, ஜெயராம் என பலர் நடிக்க ஷங்கர் இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரிக்க இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

பெரும் பெருட்செலவில் உருவாகும் பான் இந்திய படங்களில் மற்ற மொழிகளில் முன்னணியில் இருக்கும் நடிகர்களை நடிக்க வைப்பதன் மூலம் அந்த மொழிகளில் நல்ல பிசினஸ் செய்து விடலாம் என்பதை கருத்தில் கொண்டே எடுக்கப்படும் முடிவு. ஆனால், அப்படிப்பட்ட படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளும் நடிகர்களுக்கு கதையில் முக்கியத்துவம் கொடுப்பதை இயக்குனர்கள் மறந்து விடுகின்றனர் என்பதே தற்போது சில நடிகர்கள் அவ்வாறான படங்களை தவிர்த்து வருவதற்கான காரணம்.

Trending News