வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

உண்மை கதையோடு களமிறங்கும் சூப்பர் ஸ்டார்.. சம்பவத்திற்கு தயாராகும் தலைவர் 170

ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவர இருக்கும் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க தலைவர் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்திலும் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். இதில் அவர் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிக்க இருப்பது பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தலைவர் 170 படத்தின் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் லைக்கா தயாரிப்பில் ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் இப்படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தற்போது ஜோராக ஆரம்பித்துள்ளது. அதேபோன்று படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

Also read: அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 ஹீரோக்கள்.. சூப்பர் ஸ்டாரை பின்னுக்கு தள்ளிய தளபதி

இப்படி விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த வேலைகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பை நடத்தவும் இயக்குனர் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் தலைவர் 170 எந்த மாதிரியான ஒரு கதைக்களமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏனென்றால் இதற்கு முன்பாக ஞானவேல் ஒரு உண்மை கதையை படமாக எடுத்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். அது சில எதிர்ப்புகளை சந்தித்தாலும் இப்போது வரை அப்படம் ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது என்பதே உண்மை. அதனாலேயே ரஜினியும் இவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஞானவேல் மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை தான் படமாக இருக்கிறாராம்.

Also read: லால் சலாம் படத்தின் கதை இதுதான்.. உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அதாவது போலி என்கவுண்டருக்கு எதிராக போராடும் ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ரஜினி இப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். இது உண்மையில் அவருடைய ரசிகர்களுக்கான மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான். ஏனென்றால் ரஜினி காவல் அதிகாரியாக நடிக்கிறார் என்றாலே அந்த படத்திற்கு தானாகவே ஒரு கெத்து வந்துவிடும்.

இதற்கு உதாரணமாக எத்தனையோ படங்களை நாம் சொன்னாலும் மூன்று முகம் படத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் இப்போது வரை ரசிகர்கள் நினைவை விட்டு நீங்காமல் இருக்கிறது. அந்த வகையில் தலைவர் 170 படமும் அப்படி ஒரு மாஸ் கேரக்டராகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சூப்பர் ஸ்டார் சிறப்பான ஒரு சம்பவத்தை நடத்துவதற்கும் தயாராகி உள்ளார்.

Also read: கோவக்கார இயக்குனராக மாறிய ஐஸ்வர்யா.. மொய்தீன் பாயுடன் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Trending News