புதன்கிழமை, ஜனவரி 22, 2025

துப்பாக்கியை எடுத்து சுட்டுடுவேன்.. பத்திரிக்கையாளர்களை மிரட்டிய சூப்பர் ஸ்டார், காரணம் இதுதான்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் எப்போதுமே அதிரடியானவர் தான். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட இவர் தன்னுடைய கெட்ட பழக்கங்களை கூட எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மீடியா முன்பு பேசி இருக்கிறார். இந்த குணம் தான் அவரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் உட்கார வைத்திருக்கிறது.

இருப்பினும் இவர் சில சமயங்களில் பத்திரிகையாளர்கள் முன்பு கடுமை காட்டியதும் உண்டு. அப்படித்தான் ஒருமுறை தன்னை காண வந்த பத்திரிக்கையாளர்களை இவர் துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதை இங்கு காண்போம்.

Also read: அடுத்தடுத்து வெளியாகும் தலைவர் 170 அப்டேட்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

அதாவது பத்திரிக்கையாளர்களுக்கு சூப்பர் ஸ்டாரிடமிருந்து ஒருநாள் தன்னை காண வருமாறு அழைப்பு வந்திருக்கிறது. அதன்படி அவர்களும் ரஜினியை காண அவருடைய வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். அப்போது அனைவருக்கும் மது, சாப்பாடு என அனைத்தையும் தேவைக்கு அதிகமாக கொடுத்து உபசரித்த ரஜினி திடீரென்று ஒரு ஷாக் கொடுத்திருக்கிறார்.

என்னவென்றால் அனைவரும் அசைவ உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நாளை எனக்கு திருப்பதியில் திருமணம் என்று அதிரடியாக கூறியிருக்கிறார். பொதுவாக டாப் ஹீரோக்களின் திருமண செய்திகள் மீடியாக்களில் தான் முதலில் வெளிவரும். ஆனால் மறுநாள் திருமணத்தை வைத்துக்கொண்டு திடீரென விஷயத்தை கூறும் ரஜினியை பலரும் புரியாமல் பார்த்து இருக்கிறார்கள்.

Also read: பல வருடத்திற்கு முன்பே சூப்பர் ஸ்டார் செய்த அக்கப்போர்.. முட்டுக்கொடுத்து காப்பாற்றும் திரையுலகம்

அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நீங்கள் யாரும் என் திருமணத்திற்கு வரக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லி இருக்கிறார். ஒரு பத்திரிக்கையாளர் மட்டும் மீறி வந்தால் என்ன செய்வீர்கள் என்று துடுக்குத்தனமாக கேட்டிருக்கிறார். உடனே கடுப்பான ரஜினி துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.

இதனால் ஆடிப் போன பத்திரிகையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தபடி இருந்திருக்கின்றனர். அப்போது பயில்வான் ரங்கநாதன் தான் மீடியாவிடம் இப்படி கடுமையாக பேச வேண்டாம் என்று ரஜினி இடம் கூறியிருக்கிறார். உடனே அவரும் தன் தவறை புரிந்து கொண்டு சாரி என்று சொல்லி விட்டு திருமண புகைப்படம் தாலி கட்டி முடித்தவுடன் உங்கள் கைக்கு வந்து சேரும் என்று கூறி வழி அனுப்பி வைத்திருக்கிறார். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: 2கே கிட்ஸ் பார்க்க வேண்டிய ரஜினியின் 15 வெற்றி படங்கள்.. தலைவன் நடிப்பை பார்த்து மெய்சிலிர்த்து போவீங்க

 

Trending News