கடந்தமாதம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அத்துடன் இந்த படம் இந்திய அளவில் இதுவரை வெளியான படங்களில் வெறும் 16 நாட்களில் 1000 கோடி வசூலை குவித்து, பாக்ஸ் ஆஃபிஸ் சாதனை புரிந்தது,
எனவே இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் ராம்சரணின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவரது நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ஆச்சாரியார் திரைப்படம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
இந்தப் படத்தை கொரட்டல சிவா இயக்க, ராம்சரணுடன் அவருடைய தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எனவே சிரஞ்சீவியும், ராம் சரணும் இணைந்திருக்கும் இந்தப் படம் வசூல் வேட்டை ஆடும் என டோலிவுட் எதிர்பார்த்த நிலையில், முதல் நாளில் வெறும் 8 கோடி மட்டுமே வசூல் செய்தது.
அத்துடன் 150 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஆச்சாரியார் திரைப்படம், மொத்தம் 80 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாம். இதைப் போன்றுதான் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ், அந்தப் படத்திற்குப் பிறகு வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் இரண்டு படங்களும் பெரிய தோல்வியை தழுவியது.
ஆகையால் பிரபாசை போலவே ராம் சரணும் ராஜமவுலியின் பிரம்மாண்ட படத்தில் நடித்து, அடுத்த படத்தில் தடுமாறி இருக்கிறார். இதனால் குழம்பித் தவிக்கும் ராம்சரண் அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குனர் ஷங்கரிடம் கொடுத்திருக்கிறார்.
எனவே ஆச்சாரியர் படம் தோல்வியை சந்திக்க காரணம் காரணம் படத்தில் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என யாரு வேண்டுமானாலும் நடித்திருந்தால் அது ஹிட்டடிக்கும் நிலைமை மாறி தற்போது நல்ல கதை மட்டுமே ரசிகர்களிடம் செல்லுபடியாகும் என்பதை ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை பெரிய நடிகர்களுக்கு வார்னிங் கொடுத்திருக்கின்றனர்.