வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நக்மா முதல் நமீதா வரை.. மகள் வரலட்சுமி முன்னாலேயே மேடையில் கலாய்க்கப்பட்ட சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீப காலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கிடைத்த வாய்ப்பை எல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று இல்லாமல் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே இவர் செலக்ட் செய்து நடித்து வருகிறார். நிறைய துணிச்சலான கதாபாத்திரங்களை ரொம்பவும் தைரியமாக செய்து வருகிறார் வரலட்சுமி.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரசிம்மா ரெட்டி திரைப்படத்தில் கூட தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார். தற்போது இவர் இயக்குனர் பிரதாப் கிருஷ்ணா இயக்கத்தில் மனோஜ் குமார் தயாரிப்பில் ‘கொன்றால் பாவம்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

Also Read: ஒரு இரவு, ஒரு வீடு, ஒரு உயிர் பலி.. வரலட்சுமி டபுள் மீனிங்கில் பீதியை கிளப்பும் கொன்றால் பாவம் ட்ரைலர்

மேலும் கொன்றால் பாவம் திரைப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் சந்தோஷ் பிரதாப், மனோபாலா, ஈஸ்வரி ராவ், சார்லி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் திரை கதையை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

‘கொன்றால் பாவம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். மேலும் வரலட்சுமி சரத்குமாரின் அப்பாவான ‘சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்’ இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒவ்வொருவரையும் பேச அழைக்கும் பொழுது அவர்களுக்கு ஏற்ற முன்னுரையை முதலில் சொல்லி வரவேற்றார்.

Also Read: தமிழ் சினிமா வெறுத்து ஒதுக்கிய வரலட்சுமி.. அக்கட தேசத்தில் குவியும் பட வாய்ப்பால் எகுறிய சம்பளம்

அப்படி சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் சரத்குமாரை பேச அழைக்கும் பொழுது முன்னுரையாக சரத்குமார் உடன் நடித்த நடிகைகளின் பெயர்களை ஹிண்ட் ஆக கொடுக்க நினைத்து, ‘நக்மா முதல் நமீதா வரை’ என்று சொல்லி ஆரம்பித்தார். அப்போது மேடையில் சரத்குமார் உடன் அமர்ந்திருந்த வரலட்சுமி சரத்குமார் விழுந்து விழுந்து சிரித்து விட்டார்.

நடிகர் சரத்குமார் கதாநாயகனாக நடித்த காலத்தில் இந்த நடிகைகளுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. வரலட்சுமியின் அம்மா சாயாதேவி சரத்குமாரை விவாகரத்து செய்ததற்கு கூட நடிகை நக்மா தான் காரணம் என்று அப்போது தகவல்கள் வந்தன. இந்த மேடையில் அந்த தொகுப்பாளினி ‘நக்மா முதல் நமீதா’ வரை என்று சொன்னதும் வரலட்சுமி சரத்குமார் சிரித்ததற்கு இதுதான் காரணம்.

Also Read: அந்த மாதிரியான கேரக்டர் எனக்கு மட்டும்தான் பொருந்தும்.. புது ரூட்டை பிடித்த வரலட்சுமி

Trending News