வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி இதுதானா?.. சுரேஷ் ரெய்னாவிடம் ‘தல’ சொன்ன ரகசியம்

மகேந்திர சிங் தோனி என்ற ஒரு பெயர், ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் உலகையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று வரை அவருடைய பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிற்கு இணையாக வேறு யாரும் புதிதாக வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தோனி இந்திய கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல்லில் விளையாடுவது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும், உற்சாகமாகவும் இருந்தது.

இந்நிலையில் தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தலையில் குண்டை தூக்கி போடும் விதமாக தோனியின் கடைசி ஐபிஎல் சீரிஸ் இதுதான் என்ற தகவல் வெளியானது, இதனாலேயே நடப்பு ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகள் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. தோனி எந்த கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், கௌரவமும் கொடுக்கப்பட்டு வருகிறது.

Also Read:இந்திய அணியை கெடுத்து குட்டி சுவராக்கிய 5 செலக்டர்ஸ்.. கோலிக்கு ஜால்ரா போடும் தகுதியே இல்லாத ராஜாங்கம்

ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்ட நேரத்தில் தோனியும் நான் என்னுடைய கேரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன், இதனால் ஒவ்வொரு போட்டியையும் அனுபவித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி ரசிகர்களுக்கு பகீர் என்ற உணர்வை கொடுத்தார். ஆனால் அடுத்த போட்டியிலேயே இது என்னுடைய இறுதி சீரிஸ் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள் என்று சொல்லி குழப்பத்தை நீட்டித்து வைத்தார்.

இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற சென்னை அணியின் போட்டியை காண நேரில் வந்திருந்தார் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. அப்போது தோனியும், ரெய்னாவும் பேசிக்கொண்டிருந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. தற்போது ரெய்னா, சிஎஸ்கே ரசிகர்களுக்காக மிகப்பெரிய ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

Also Read:தோனி வேற கிரகத்துல பிறக்க வேண்டியவர்.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் பிரபலத்தின் பேட்டி

அதாவது சிஎஸ்கே அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னிடம் இந்த ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்று விட்டு, அதன் பின்னர் அடுத்த ஆண்டும் விளையாடிவிட்டு தான் நான் ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்தார் என்று சொல்லி இருக்கிறார். இது தற்போது சென்னை அணியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

சிஎஸ்கே அணி தற்போது நல்ல பார்மில் இருக்கிறது, மேலும் மகேந்திர சிங் தோனியும் 41 வயதிலும் உடல் தகுதியுடன் இருக்கிறார். அவருடன் நெருங்கிய பழகியவர் என்ற முறையில் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவார், எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார். இந்த நடப்பு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 13 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:12 வருடங்களுக்குப் முன் தோனி செய்த அநீதியை போட்டுடைத்த சேவாக்.. காப்பாற்றி தூக்கிவிட்ட சச்சின்

Trending News