திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மறுஜென்மம் பெற்ற தனம்.. இறுதி அத்தியாயத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்தை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் சொந்த குடும்பத்திற்கு தெரியாமல் தனத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய முல்லை மற்றும் மீனா இருவரும் முற்படுகிறார்கள்.

ஒரு வழியாக குடும்பத்தை சமாளித்து மூவரும் திருச்சிக்கு சென்று விடுகிறார்கள். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தெரியாமல் அறுவை சிகிச்சையும் நடக்கிறது. இதில் ஏதாவது விபரீதம் நடந்தால் கண்டிப்பாக மீனா மற்றும் முல்லை இருவருமே மொத்த குடும்பத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

இவ்வாறு பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தி உள்ளது. அதாவது தனத்திற்கு நல்லபடியாக சிகிச்சை முடிந்து விடுகிறது. இதனால் முல்லை மற்றும் மீனா இருவருமே மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மேலும் தனம் கண் முழித்த பிறகு இருவரும் சென்று பார்க்கிறார்கள். அப்போது இனி உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மீனா கூறுகிறார். உங்க ரெண்டு பேரால தான் இப்போ நான் நல்லபடியா இருக்கேன் என்று தனமும் நன்றி சொல்கிறார். இந்த சிகிச்சையை வீட்டுக்கு தெரியாமல் இவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

Also read: ஆதிரை தலையில் இடியை இறக்கிய கரிகாலன்.. ஈஸ்வரிக்காக எதையும் செய்யத் துணிந்த ஜீவானந்தம்

மேலும் குடும்பத்தில் உள்ள அனைவருமே இனி சந்தோசமாக இருக்க உள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் புது வீட்டுக்கு கிரகப்பிரவேசம் நடத்தி ஒட்டுமொத்த குடும்பமும் அங்கு மகிழ்ச்சியாக இருக்கும் படி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வர இருக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் சுவாரசியமாகத்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தொடங்கப்பட்டது.

மேலும் அதில் உள்ள கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து வெற்றிகரமான தொடராக ஒளிபரப்பி வந்தார்கள். ஆனால் சமீபகாலமாக இந்த தொடரை எப்போது முடிப்பார்கள் என்று சொல்லும் அளவிற்கு அருமையாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது இயக்குனர் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறார்.

Also read: கதையே இல்லாமல் உருட்டினால் இப்படித்தான் டிஆர்பி கம்மியாகும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு ஒரு எண்டு கார்டு இல்லையா!

Trending News