செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சுதா கொங்கராவின் மெகா கூட்டணியில் உருவாகும் சூர்யா 43.. அதிரடியாக இணைந்த மலையாள இளம் சூப்பர் ஸ்டார்

சூர்யா தனது 42வது படமான கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சிறுத்த சிவா இயக்கும் இந்த படம் 10 மொழிகளில் 3டி முறையில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவிருந்தார். இந்த படத்தின் சூட்டிங் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் வாடிவாசல் ஷூட்டிங் துவங்க திட்டமிட்டு இருப்பதால், சூர்யா இப்போது தனது 43-வது படத்தில் கங்குவா-விற்கு பின் நடிக்க முடிவு செய்துள்ளார். சூர்யா 43 படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார்.

Also Read: 40 வயதிலும் கொள்ள அழகுடன் சுற்றும் 6 நடிகைகள்.. சூர்யாவின் அன்பால் எப்போதும் ஜொலிக்கும் ஜோ

சூரரைப் போற்று படத்தின் மூலம் முதன்முதலாக இணைந்த இந்தக் கூட்டணி 6 தேசிய விருதுகளை தட்டி தூக்கியது. அதனால் மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா மாஸ் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் இடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சூர்யா 43 படத்தில் மலையாளத்தின் இளம் சூப்பர் ஸ்டார் துல்கர் சல்மான் சூர்யாவுடன் இணைந்து நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

இவர் தமிழிலும் வாயை மூடி பேசவும், பெங்களூர் டேஸ், ஓ காதல் கண்மணி, மகாநதி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சீதாராமன் படத்தை பார்த்துவிட்டு ரசிகைகள் பலரும் இவரைக் கண்டு மயங்கி கிடக்கின்றனர். அப்படிப்பட்ட ஹீரோ சூர்யா உடன் இணைவது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைக்கிறது.

Also Read: இந்த வருடம் ஒளிப்பதிவில் பின்னிய 5 படங்கள்.. பிரம்மிக்க செய்த விடுதலை வெற்றிமாறன்

அது மட்டுமல்ல மாஸ் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படம் ஜிவி பிரகாசுக்கு 100-வது படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் சூரரைப்போற்று மாதிரியே செம்ம மாஸ் ஆன ஸ்கிரிப்டை இந்த படத்திற்காக சுதா கொங்கரா தேர்வு செய்து இருக்கிறார்.

இவர் தன்னுடைய ஹிந்தி படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சூர்யா 43 படத்தில் தான் இணைய போவதற்கும் சமீபத்திய பேட்டி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை ஒரு கேங்ஸ்டர் படமாகவும் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். எனவே சூர்யா- சுதா கொங்கரா- துல்கர் சல்மான்- ஜிவி பிரகாஷ் கூட்டணியின் மேஜிக், சூர்யா 43 படத்திலும் தரமான சம்பவத்தை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: சாமியே சைக்கிள்ல போறாரு பூசாரிக்கு புல்லட்டா.? ஓவர் அலும்பு பண்ணும் சூர்யா, தனுஷ்

Trending News