புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தீப்பிழம்பிற்கு நடுவில் உருமாறி நிற்கும் சூர்யா.. ஆக்ரோஷ ஆட்டத்துடன் வெளியானது கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிள்

Kanguva First Single: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கங்குவா வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர்.

பீரியட் மற்றும் பேண்டஸி படமாக உருவாகி இருக்கும் கங்குவா முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று சூர்யா தன்னுடைய 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பரிசு கொடுக்கும் வகையில் ஃபயர் சாங் ஆரவாரமாக வெளிவந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே இப்பாடல் பற்றி கங்குவா இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தார். அதற்கு கொஞ்சமும் குறை வைக்காத அளவுக்கு அனல் தெறிக்க வெளிவந்துள்ளது முதல் பாடல்.

மொத்தமாக உருமாறி நிற்கும் சூர்யா

ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே என தொடங்கும் பாடல் வேற லெவலில் படமாக்கப்பட்டிருக்கிறது. 300 கோடி பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் இருக்கும் பிரம்மாண்டம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதிலும் ஆதிவாசி போன்று இருக்கும் சூர்யாவின் தோற்றமும் கண்களில் தீப்பிழம்பு பறக்க அவர் ஆடும் ஆட்டமும் அருள் வந்தது போல் இருக்கிறது. அதற்கேற்றார் போல் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மிரட்டல் இசை ஆரவாரமாக இருக்கிறது.

ஆயிரக்கணக்கான டான்சர்ஸ் உற்சாகமாக ஆடி இருக்கும் இப்பாடல் தற்போது இணையத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு பாடலே படம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டதாக சூர்யா ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர்.

சூர்யாவுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த கங்குவா

Trending News