வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு-ன்னு முடிவு பண்ணிய சூர்யா.. அந்தரத்தில் தொங்கும் வெற்றிமாறனின் வாடி வாசல்

Surya and Vettrimaran in Vaadivasal: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, கங்குவா படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படம் 10 மொழிகளில் 3d முறையில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. மற்ற படங்களை விட இந்த படத்தில் சூர்யா அதிகமாக மெனக்கீடு செய்து வித்தியாசமான லுக்குடன் மிரட்டலான நடிப்பை கொடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு அடுத்து சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சூர்யா ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு முடிவு பண்ணி விட்டார். அதற்கான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை சந்தித்து பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால் அங்கே அக்ரிமெண்டில் போடப்பட்ட விஷயம் என்னவென்றால் சூர்யா இந்த படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகிவிட்டால் படப்பிடிப்பு முடியும் வரை மற்ற படங்களில் நடிக்க கூடாது என்று போடப்பட்டிருக்கிறது. இதனால் தற்போது வாடிவாசல் படம் என்ன ஆகும் என்று ஒரு கேள்விக்குறி இருக்கிறது. அதனால் சூர்யா வெற்றிமாறனை சந்தித்து வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு-ன்னு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.

Also read: சாய் பல்லவிக்கு பின் நடனத்தில் ஆட்டி படைக்க போகும் ஹீரோயின்.. இப்பவே சூர்யா துண்டு போடும் பெண் பிரபு தேவி

அதாவது சூர்யா சொல்லியது என்னவென்றால் அந்த ஹிந்தி படத்தை நடிப்பதற்கு முன் வாடிவாசல் படத்தை நடித்து முடித்து விடுகிறேன். அதன் பிறகு நான் ஹிந்தி படத்தில் கமிட் ஆகி நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதனால் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக ஆரம்பித்து விட்டால் எல்லாத்தையும் ஈசியாக முடித்து விடலாம் என்று சூர்யா கேட்டிருக்கிறார்.

அந்த வகையில் வெற்றிமாறன், சூர்யா சொன்னபடி கூடிய சீக்கிரத்தில் வாடிவாசல் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டால் வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும். அப்படி இல்லை என்றால் வெற்றிமாறனின் வாடிவாசல் படம் அந்தரத்தில் தான் தொங்கும். இதனால் கூடிய விரைவில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறாரா அல்லது பாலிவுட் படத்திற்கு போகப் போகிறாரா என்பது தெரிந்து விடும்.

Also read: ஒரே மாதிரியான கதையில் கமிட் ஆகிய சூர்யா.. கைவசம் இருக்கும் 3 படங்கள்

Trending News