செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித்,விஜய் 50 படங்களில் செய்யாததை சாதித்துக் காட்டிய சூர்யா.. இனியாவது முடியுமா தளபதி.?

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் இருவரும் இதுவரை செய்யாத காரியத்தை சூர்யா அசால்டாக செய்திருக்கிறார். ஏனென்றால் அஜித், விஜய் இருவரும் திகிலூட்டும் கொடூரமாக ஹாரர் (Horror) கதாபாத்திரங்களிலும் நடித்ததில்லை.

விஜய் விளையாட்டு வீரராக கில்லி, பிகில் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதைப்போன்று கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் காட்டும் நடிகர் அஜித் குமார் விளையாட்டு வீரராக இதுவரை ஒரு படங்களில் கூட நடிக்கவில்லை.

Also Read: கமலின் மருதநாயகத்தை போல ரஜினி, அஜித், விஜய்க்கு டிராப் ஆனா 11 படங்களின் லிஸ்ட்

நிஜவாழ்க்கையில் விளையாட்டை விரும்பும் அஜித், விளையாட்டு வீரராக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பத்தை தெரிவித்தாலும், அப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் இன்றுவரை அவரால் நடிக்க முடியவில்லை.

மேலும் அஜித்குமார் தற்போதுவரை ஹாரர், சயின்ஸ் சம்பந்தப்பட்ட படங்களிலும், வரலாற்று படங்களிலும் நடித்ததில்லை. இந்த விஷயத்தில் சூர்யாவைப் பொறுத்தமட்டிலும் விளையாட்டு வீரராகவும், ஹாரர் கதாபாத்திரங்களிலும் வரலாற்று சம்பந்தப்பட்ட படங்கள் என எல்லா கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார்.

Also Read: கல்யாணம் பண்ணாத ஹீரோயினை விழுந்து விழுந்து கவனிக்கும் விஜய்

அதுவும் உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த விக்ரம் படத்தில் கிளைமாக்ஸில் சில நிமிடங்கள் மட்டுமே ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக, சூர்யா தோன்றி ரசிகர்களை மிரள வைத்திருப்பார்.

இதுபோன்று 50 படங்களுக்கு மேல் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை கையில் வைத்திருக்கும் விஜய் அஜித் இருவரையும் ரசிகர்கள் பார்க்க நினைத்தாலும் அப்படி இதுவரை இருவரும் நடிக்காமல் ரசிகர்களை ஏங்க விட்டுருக்கின்றனர்.

Also Read: விருது கிடைத்தும் சந்தோஷப்பட விடாமல் சூர்யாவை துரத்தும் பிரச்சனை

Trending News