செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மூன்று வருடத்திற்கு 6 படங்களில் பிஸியாகும் சூர்யா.. கங்குவா கூட்டணியை தும்சம் செய்ய வரும் பாலிவுட்டின் பிரம்மாண்டம் படம்

Suriya Up Coming Movies: சூர்யா அடுத்த மூன்று வருடங்களுக்கு மிகவும் பிசியாக இருக்க உள்ளார். ஏனென்றால் ஓய்வெடுக்காமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார். இப்போது தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் கங்குவா படமும் உள்ளது.

முதல்முறையாக வித்யாசமான முயற்சியை சூர்யா மேற்கொண்டு உள்ளதால் அவருக்கு இந்த படம் கைகொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்கள். இந்நிலையில் சூர்யாவின் 43வது படத்தில் வெற்றி கூட்டணி தான் இணைய இருக்கிறது.

Also Read : பாலிவுட் பக்கம் செல்லும் சூர்யா.. 2 பாகங்களாக உருவாகும் பிரம்மாண்ட சரித்திர படம்

அதாவது சூரரைப் போற்று என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த சுதா கொங்கரா இணைய இருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க உள்ளார். மேலும் அடுத்ததாக பல வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அடுத்ததாக ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா என்ற படத்தில் சூர்யா நடிக்க வருகிறார். பாலிவுட்டின் பிரம்மாண்ட படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. மேலும் மகாபாரத கதையை தழுவி இந்த படத்தை எடுக்க இருக்கிறார்கள்.

Also Read : ரஜினி, கமலுக்கு மட்டும் பச்சைக்கொடி.. சிம்பு, சூர்யா படம்னா தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் ஆப்பு

சூர்யாவின் கங்குவா படத்தையே தூம்சம் செய்யும் அளவிற்கு இந்த படம் உருவாக இருக்கிறதாம். அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் படம் தான் ரோலக்ஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே இரும்பு கை மாயாவி என்ற படத்தில் சூர்யா ஒப்பந்தம் ஆன நிலையில் சில காரணங்களினால் அந்த படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு விக்ரம் படத்தில் இவர் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரிய வரவேற்பு பெற்றது. இப்போது லோகேஷ் தனியாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஒரு படமாக எடுக்க இருக்கிறார். மேலும் கடைசியாக தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் சண்டூ மொண்டெட்டி இயக்கத்தில் சூர்யா சைக்கோ ஃபேண்டஸி கதையில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு சூர்யாவின் லைன் அப்பில் ஆறு படங்கள் இருக்கிறது.

Also Read : சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னாவின் அந்தரங்க காதலன்.. ரொமான்டிக் ஹீரோவாச்சே, சுதா கொங்கரா யூனிவர்ஸ்

Trending News