புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அந்த ஒரு விஷயத்தில் சூர்யாவை அடிச்சுக்க ஆளே இல்ல.. அடுத்து உடைய போகும் அஜித், விஜய்யின் மார்க்கெட்

நடிகர் சூர்யாவிற்கு 2022 ஆம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாகவே அமைந்துள்ளது. தேசிய விருதுகள், ரோலக்ஸ் கதாப்பாத்திரம், மூன்று படங்கள் தயாரிப்பு என எல்லாமே அவருக்கு நல்லபடியாக அமைந்தது. ஆனால் அவர் நடித்த எதற்கும் துணிந்தான் திரைப்படம் தான் அவரை விமர்சன ரீதியாக ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். இதனிடையே சூர்யா இந்த வெற்றிகளை கையில் வைத்துக்கொண்டு அடுத்தடுத்த படங்களின் கதையை மிகவும் கவனித்துடன் தேர்ந்தெடுத்து வருகிறார்.

இதற்கு எடுத்துக்காட்டாக பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா, படப்பிடிப்பின்போது பாலாவிற்கு, சூர்யாயாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அப்படம் பாதியிலேயே நிறுத்த உள்ளதாக பாலா அண்மையில் நோட்டிஸ் ஒன்றை வெளியிட்டார். அதில் சூர்யாவுடன் பிரச்சனை என்றெல்லாம் கூறப்படவில்லை என்றாலும், அது தான் பிரதானமான உண்மையாக அமைந்தது.

Also Read: அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கும் சூர்யாவின் மொத்த பட லிஸ்ட்.. இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42

மேலும் நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கராவின் சூரரை போற்று திரைபடத்தில் நடித்து வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் அவருடன் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்க ஆயத்தமாகி உள்ளார். ஆனால் இவருக்கெல்லாம் முன்பாவே வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா பல நாட்களாக அப்படத்தில் நடிக்க மும்முரமாக இருந்தார். ஆனால் வெற்றிமாறன் விடுதலை படத்தை கடந்த 3 ஆண்டுகளாக படப்பிடிப்பை நடத்தி வரும் நிலையில், வாடிவாசல் திரைப்படமும் தள்ளி போனது.

இந்நிலையில் அடுத்த ஒரு பிரமாண்டமான திரைப்படமாக சூர்யாவின் 42 வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் சூர்யா . இத்திரைப்படம் எழுத்தாளர் சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவலின் கதையின் அடிப்படையில் 5 மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. இதனிடையே இத்திரைப்படம் வெளியானால் கட்டாயம் நடிகர் சூர்யா, அஜித், விஜய்யின் மார்க்கெட்டை காலி செய்யும் அளவிற்கு இப்படத்தில் அவரது நடிப்பு பிரம்மாண்டமாக இருக்கும் என அண்மையில் இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.

Also Read: 10 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் சூர்யா-42.. இன்னும் பல சுவாரஸ்யமான அப்டேட் கொடுத்த இயக்குனர்

சிறுத்தை சிவா ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் படங்களில் கைதேர்ந்தவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வரலாற்று படம் அவருக்கு மிகவும் புதிதானது. ஏற்கனவே நடிகர் சூர்யா இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் 7ஆம் அறிவு படத்தில் போதிதர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னனாக நடித்து சூர்யா அப்படத்தில் கலக்கியிருந்தாலும் படம் விமர்சன ரீதியாக தோல்வியுற்றது.

இந்த படம் வெளியாவதற்கு முன்பாக சூர்யாவுக்கு கொடுத்த பில்டப்புகள் ஏராளம். ஆனால் படம் ரிலீசான உடன் அத்தனையும் சுக்கு நூறாக நொறுங்கியது. தற்போது 2வது முறையாக வரலாற்று படத்தில் நடிக்க உள்ள சூர்யா, படத்திற்காக பல தோற்றங்களை மாற்றி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எது எப்படியோ இந்த படம் சூர்யாவிற்கு கைகொடுத்தால் போதுமானது, அஜித், விஜய் மார்க்கெட்டை காலி செய்வதெல்லாம் இரண்டாவது பச்சம் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: சிக்ஸ்பேக் நடிகையுடன் ஜோடி சேரும் சூர்யா.. மிரர் செல்ஃபியால் மிரண்டுபோன இணையதளம்

Trending News