Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Retro தோல்வியால் விலகிய 600 கோடி பட்ஜெட் தயாரிப்பாளர்.. விழி பிதுங்கும் கர்ணன்

Retro தோல்வியால் விலகிய 600 கோடி பட்ஜெட் தயாரிப்பாளர்.. விழி பிதுங்கும் கர்ணன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வசூலை தொட முடியாமல் திணறியது. பாக்ஸ் ஆபிஸில் 120 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. OTT பிசினஸில் 85 […]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வசூலை தொட முடியாமல் திணறியது. பாக்ஸ் ஆபிஸில் 120 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

OTT பிசினஸில் 85 கோடி, சேட்டிலைட் ரைட்ஸ் 25 முதல் 30 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது. இதை தவிர ஆடியோ ரைட்ஸ் 7 கோடிக்கு விற்று மொத்தம் 235 கோடி வரை வசூல் செய்துள்ளது ரெட்ரோ படம்.

இது ஒரு புறம் இருக்க இரண்டு வருடங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட கர்ணன் படம் கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் எடுப்பதற்கு எக்செல் என்டர்டெயின்மென்ட் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் ரெட்ரோ பட தோல்வியை பார்த்து பின்வாங்கி விட்டதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது.

கர்ணன் படத்தை இயக்கப் போவது Rakyesh Om prakash Mehra இவருக்கு இது கனவு படமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். தயாரிப்பாளர் ஒதுங்கியதால் மீண்டும் ஜியோ ஸ்டுடியோ தயாரிப்பதற்காக முன்வந்துள்ளது.

ஏற்கனவே ஒரு சில சர்ச்சையில் சிக்கி இருக்கும் சூர்யா எப்போது மீண்டு வருவார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. எது எப்படியோ இந்த படம் மீண்டும் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சூர்யாவுடன் பல பாலிவுட் நட்சத்திரங்கள் இணைய உள்ளனர். இதற்கான வேலைகள் அதிரடியாக தொடங்கப்பட்டுள்ளதாகவும், சூர்யாவை முழு நடிப்பு திறமையை இந்த படத்தில் பார்க்கலாம் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். 

இதற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எந்த படங்களில் நடிக்க முடியாதாம் ஏற்கனவே தற்போது வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படம் தொடங்கப்பட உள்ளது. அது முடிந்த பின் அடுத்த வருடத்தில் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.