வியாழக்கிழமை, மார்ச் 6, 2025

கங்குவாவிற்கு பின் ஓவர் நொட்டை சொல்லும் சூர்யா.. கடும் அப்சட்டில் கார்த்திக் சுப்புராஜ்

சூர்யா ரெட்ரோ படம் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஜெய் பீம் படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஹிட் ஆகவில்லை . இதனால் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரும் ரெட்ரோ படத்தைப் பொறுத்தே இவரது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இருக்கும்.

கடைசியாக சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான கங்குவா படம் பெரும் அடியை கொடுத்தது. அதிலிருந்து ஒவ்வொரு கதையையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார் சூர்யா. சமீபத்தில் கூட இரண்டு மூன்று ப்ராஜெக்டை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.

இப்படி இவர் நடந்து கொள்வதால் நல்ல நல்ல ப்ராஜெக்ட்டுகள் எல்லாம் இவர் கைநழுவி போயியுள்ளது. அதற்கு உதாரணம் சுதா கொங்காரவின் புறநானூறு படம் தான். அந்த கதையில் அதை மாற்றுங்கள் கதையை இப்படி மாற்றுங்கள் என தொடர்ந்து அலை கழித்ததால் தான் சூர்யா கை மீறி போனது.

இப்பொழுது இவரின் நடிப்பில் ரெட்ரோ படம் மே 1ஆம் தேதி ரிலீசாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எப்பொழுதுமே ஹீரோக்களை மாஸாக காட்டும் இயக்குனர் இவர். பேட்டை படத்தில் கூட ரஜினியை செம மாஸாக காட்டியிருப்பார்.

இந்த படம் முழுவதுமாக முடிந்து விட்டது. ஆனால் இதை மீண்டும் மீண்டும் பார்த்து சூர்யாபல மாறுதல்களை செய்ய சொல்லி கேட்டு வருகிறாராம். சூர்யாவின் நெருங்கிய நண்பர்களும் அவருக்கு ஏதேதோ அறிவுரை கொடுத்து வருகிறார்கள். இதனால் கார்த்திக் சுப்புராஜ் ஓவர் அப்செட்டில் இருக்கிறார்.

Trending News