புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அசம்பாவிதம்.. சூர்யாவுக்கு நடந்த விபத்து, பாதியில் நின்ற படப்பிடிப்பு

Suriya: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா படம் திரைக்கு வர தயாராகிவிட்டது. அக்டோபர் 10ஆம் தேதியை குறிவைத்துள்ள இப்படம் நிச்சயம் ஆயிரம் கோடி வசூலை தட்டி தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இப்படத்தில் கார்த்தியும் முக்கிய கேரக்டரில் வருவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் இதன் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.

இப்படி பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் சூர்யா தன்னுடைய 44 வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்று சமீபத்தில் சூர்யா பிறந்த நாளன்று வெளிவந்தது.

சூர்யா 44 படப்பிடிப்பில் நடந்த அசம்பாவிதம்

அது வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக சூர்யாவின் தலையில் அடிபட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மைனர் காயம் தான் என்றாலும் சில நாட்கள் அவர் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் படப்பிடிப்பது தற்போது தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. சூர்யாவுக்கு இப்படி ஒரு விபத்து ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள் தற்போது அவர் விரைவில் நலம் அடைய வேண்டும் என வேண்டுதல் வைத்து வருகின்றனர். இதனால் அவரின் நெருங்கிய வட்டாரங்கள் பயப்படும் படியாக எதுவும் இல்லை ரசிகர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

சூர்யாவுக்கு தலையில் ஏற்பட்ட காயம்

Trending News