ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சூர்யாவை நம்புன வரைக்கும் போதும்.. பிரபல இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு

சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு சூர்யா தற்போது பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 18ம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது.

இதையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இயக்குனர் சிவா தற்போது கடுப்பில் இருக்கிறார். ஏனென்றால் இந்த படங்களுக்கு முன்பே அவர் சூர்யாவிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார்.

அப்போதெல்லாம் சூர்யா படத்தை ஆரம்பித்து விடலாம் என்று தலையை ஆட்டிவிட்டு இப்போது அவருக்கு வாய்ப்பு தராமல் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். இதுதான் சிவாவின் கோபத்திற்கு காரணம்.

இதனால் அவர் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அது என்னவென்றால் உங்களை நம்பின வரைக்கும் போதும் உங்களை விட எவ்வளவு பெரிய நடிகர்களை வைத்து நான் படத்தை இயக்கி இருக்கிறேன். இங்கு கைவசம் படம் இல்லை என்றால் தெலுங்கு பக்கம் போய் படம் இயக்குவேன் என்று கூறியிருக்கிறார்.

சிறுத்தை சிவா மற்றும் சூர்யாவின் கூட்டணியில் உருவாகவிருக்கும் அந்த புதிய படத்தில் சூர்யாவுக்கு இரண்டு வேடங்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இதனால் சிறுத்தை படத்தை போல இந்த படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூர்யாவின் இந்த குளறுபடியால் தற்போது இந்த படம் உருவாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எது எப்படி இருந்தால் என்ன தமிழ் இல்லைன்னா தெலுங்கு என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார். அதனால் கூடிய விரைவில் சிவா இயக்கப் போகும் புதிய திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Trending News