புதன்கிழமை, ஜனவரி 22, 2025

Suriya 44 : சூர்யாவுடன் ஜோடி போடும் 6 அடி விஜய் பட நடிகை.. சல்லடை போட்டு தேடிய கார்த்திக் சுப்புராஜ்

சூர்யா, சிறுத்தை சிவாவின் கங்குவா படத்தில் நடித்த நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார். ஜிகர்தண்டா, ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தான் கார்த்திக் சுப்புராஜ்.

இவர் சூர்யா 44 படத்திற்காக ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைகளை சல்லடை போட்டு தேர்ந்தெடுத்து வருகிறார். இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ஜோஜு ஜார்ஜ் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

தனுஷ் உடன் மோதிய இவர் இப்போது சூர்யாவுடன் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் சூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க உள்ளார். கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.

விஜய் பட நடிகையுடன் ஜோடி போடும் சூர்யா

இந்நிலையில் சூர்யா 44க்கு ஆறடி நடிகையை ஒப்பந்தம் செய்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதாவது விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தவர் தான் பூஜா ஹெக்டே. இதைத் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வந்தாலும் அந்தப் படங்கள் வெற்றி என்பது சொற்பம் தான்.

ஆனாலும் பூஜா ஹெக்டேக்கு உள்ள மவுசு தற்போது வரை குறையவில்லை. இதனால் முதல்முறையாக சூர்யா உடன் பூஜா ஹெக்டே ஜோடி போட இருக்கிறார். ஏற்கனவே அனுஷ்கா சூர்யாவுடன் நடிக்கும் போது விமர்சனங்கள் இருந்தது.

அதாவது சூர்யாவை விட அனுஷ்கா உயரம் என்று பலரும் கேலி செய்தாலும் சிங்கம் படம் மாஸ் ஹிட் பெற்றது. அதேபோல் இப்போது பூஜா ஹெக்டே உயரமாக இருந்தாலும் சூர்யாவுக்கு பக்காவாக பொருந்துவார் என்று கார்த்திக் சுப்புராஜ் கணக்கு போட்டிருக்கிறார்.

Trending News