வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சூப்பர் ஸ்டார் பட இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யா – ராம் சரண்? அப்போ RRR-ஐ விஞ்சி விடுமா?

இந்திய சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் பெரியளவில் பேசப்பட்ட நிலையில், அடுத்து, சூர்யா, ராம்சரண் இருவரும் இணைந்து நடிக்கப் போவதாகத் தக்வல் வெளியாகிறது.

சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் யார் யார் நடிப்பது என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

அதன்படி, தர்மேந்திரா- அமிதாப் பச்சன், ரஜினி – கமல், ஷாருக்கான் – சல்மான்கான், விஜய் – அஜித். சூர்யா – விக்ரம் இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் உச்ச நடிகர்களாக இருக்கும் இருவர் சேர்ந்து நடிப்பது சினிமாத்துறையினரால் ஆச்சர்யர்மாகப் பார்க்கப்படும்.

அப்படித்தான் ராவணாவில் விக்ரமும் இணைந்து அபிஷேக் பச்சன் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து ராம்சரண் நடித்திருந்தார். ஜெயிலரின் ரஜினியுடன் இணைந்து, சிவராஜ்குமார் நடித்திருந்தார். இப்படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

இந்த நிலையில் பிரபல கன்னட இயக்குனர் நர்த்தன், ஆக்சன் படங்கள் எடுப்பதில் வல்லவன். அவர் இயக்கிய முப்தி படம் படம் பெரிய ஹிட். இப்படத்தில் சிவராஜ்குமார் கருநாட சக்கரவர்த்தி இருவரும் நடித்திருந்தனர்.

சூர்யா- ராம் சரண் இணைந்து நடிக்கிறார்களா? இல்லையா

முப்தி படத்தின் 2 வது பாகம் பைரதி ரணங்கள் என்ற பெயரில் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை நர்த்தனே இயக்கிய நிலையில், அவரது அடுத்த படம் பற்றி அப்டேட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், என் அடுத்த படத்தை கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்யவில்லை. இதற்காக சூர்யா & ராம் சரணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டி இறுதி செய்தவுடம் இதுபற்றி அறிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கங்குவா ரிலீஸுக்குப் பின் தற்போது சூர்யா 45 படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதேபோல்ம் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திற்குப் பின் ராம்சரண் தற்போது ஆர்.சி 16 படத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. சூர்யா, ராம் சரண் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் அப்படம் நிச்சயம் வரவேற்பை பெறும். ஆர்.ஆர்.ஆர் படம் போல் வசூல் குவித்து ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் என பேசப்பட்டு வருகிறது.

நர்த்தன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார்?

ஒரு வேளை, நர்த்தன் இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா அல்லது ராம்சரண் இருவரில் ஒருவர் இப்படத்தில் ஹீரோவாக கமிட் ஆனாலும் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏனென்றால் இயக்குனர் ஏற்கனவே 2 தொடர் ஹிட் கொடுத்தவர் என்பதால் அவரின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Trending News