வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அக்கட தேசத்து நடிகருடன் ஓவர் நெருக்கம் காட்டும் சூர்யா.. அடடே பார்ப்பதற்குக் கூட ஒரே மாதிரி இருக்காங்களே!

Suriya: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, தற்போது கங்குவா படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். இதில் பாபி தியோல், திசா பதானி, நடராஜன், ஜெகபதி பாபு, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் 3d தொழில்நுட்பத்துடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றிக்காக சூர்யா அதிகமான ரிஸ்க்களை எடுத்து நடித்து வருகிறார்.

முக்கியமாக சில காட்சிகள் ரியலாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு விஷயங்களையும் மெனக்கெடு செய்து சில அனிமல்களுடன் பயிற்சி எடுத்து ரியலாகவே நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் போய்க் கொண்டிருக்கிறது. இதில் சூர்யாவின் டெடிகேஷன் ஆன நடிப்பை பார்த்து இன்னொரு நடிகர் அப்படியே மிரண்டு விட்டாராம்.

அதனால் சூர்யாவிடம் நேரடியாக சென்று அவரை பாராட்டி எப்படி உங்களால் மட்டும் இந்த அளவிற்கு ரிஸ்குகளை எடுக்க முடிகிறது என்ற அவர் கேட்டிருக்கிறார். அத்துடன் நாங்க எல்லாம் மதியம் வந்து சாயங்காலம் ஆனதும் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு போய்விடுகிறோம். ஆனால் நீங்கள் காலையில் சீக்கிரமாகவே சூட்டிங் வந்து இரவு வரை நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார்.

Also read: வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு-ன்னு முடிவு பண்ணிய சூர்யா.. அந்தரத்தில் தொங்கும் வெற்றிமாறனின் வாடி வாசல்

அப்படி சூர்யாவை பிரமித்து பாராட்டியது யார் என்றால் இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் பாபி தியோல் தான். அது மட்டுமில்லாமல் சூரியாக்கும் இவருக்கும் தற்போது நெருக்கம் அதிகரித்துவிட்டது. அதனால் நட்பு ரீதியாகவும் பழக ஆரம்பித்து விட்டார்கள். எங்கே போனாலும் ஒன்றாக போவது, ஒன்னாவே சுற்றுவது என்று இவர்களுடைய பழக்கம் ஆரம்பித்துவிட்டது.

இவர்கள் இருவரையும் பார்ப்பதற்கு கூட அச்சு அசலாக ஒன்னு போலவே இருக்கிறார்கள். ஏற்கனவே தற்போது சூர்யாவிற்கு பாலிவுட் மோகம் அதிகரித்துவிட்டது. மனைவி குழந்தைகளுடன் அங்கே ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். இதனை தொடர்ந்து சூர்யா அவருடைய அடுத்த படத்தை பாலிவுட்டில் தான் பண்ண போவதாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பாலிவுட் நடிகரிடமும் நெருங்கி பழகி நட்பு ரீதியான பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்.

Also read: சாய் பல்லவிக்கு பின் நடனத்தில் ஆட்டி படைக்க போகும் ஹீரோயின்.. இப்பவே சூர்யா துண்டு போடும் பெண் பிரபு தேவி

Trending News