சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

கங்குவா ரிலீஸ் தேதியை லாக் செய்த சூர்யா.. மிரட்டும் போஸ்டரோடு வெளிவந்த அப்டேட்

Kanguva Release: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா கடின உழைப்பை கொடுத்து நடித்துள்ள கங்குவா படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக உருவாகி வந்த இப்படம் அக்டோபர் 10 ரிலீஸ் ஆக இருந்தது.

kanguva
kanguva

ஆனால் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் அன்றைய தினத்தில் போட்டிக்கு வந்த நிலையில் கங்குவா ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்தான். இருப்பினும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் அன்றைய தேதியில் அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் உள்ளிட்ட படங்கள் மோதுகிறது. கங்குவாவை பொறுத்தவரையில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. அதனால் சோலோவாக வெளியானால்தான் வசூலை அள்ள முடியும்.

நவம்பர் மாதத்தை லாக் செய்த சூர்யா

அதனாலேயே தற்போது தயாரிப்பு தரப்பு கடந்த சில வாரங்களாக இது குறித்த ஆலோசனை நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து இன்று கங்குவா படத்தில் இருந்து முக்கிய அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அது நிச்சயம் ரிலீஸ் தேதி ஆகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தற்போது கங்குவா நவம்பர் 14 உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தற்போது ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் நிச்சயம் படம் ஆயிரம் கோடியை வசூல் செய்யும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வருடத்தின் பல சாதனைகளை சூர்யா முறியடிப்பார் என கொண்டாடி வருகின்றனர்.

ஒருவழியா ரிலீசுக்கு தயாரான கங்குவா

Trending News