Kanguva Trailer: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கும் கங்குவா அக்டோபர் 10ஆம் தேதி வெளிவர இருக்கிறது. மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் நேற்று முதல் அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏனென்றால் சூர்யா நடிப்பில் படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. அதனாலயே அவருடைய ரசிகர்கள் கங்குவாவை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அதிரடியாக ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. ஆரம்பமே அமர்க்களம் என்ற ரேஞ்சில் ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொட்டுள்ளது.
மெய்சிலிர்க்க வைத்த சூர்யா
அதிலும் பாபி தியோல், சூர்யா இருவரின் தோற்றம், வசனம் அனைத்தும் பட்டையை கிளப்பி இருக்கிறது. அதே சமயம் பின்னனி இசை, கேமரா ஒளிப்பதிவு அனைத்திலும் இயக்குனர் எந்த அளவுக்கு மெனக்கெட்டு இருக்கிறார் என்பதும் தெரிகிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி படம் என்ற பெருமையை இப்படம் தட்டி தூக்கி விடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் ஹாலிவுட் தரத்தை மிஞ்சி மாஸ் காட்டி இருக்கும் இந்த ட்ரெய்லர் தற்போது சூர்யா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரம்மாண்டத்தின் உச்சத்தை காட்டிய கங்குவா ட்ரெய்லர்
- கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் சிறுத்தை சிவா
- கங்குவாவுடன் மோதுமா வேட்டையன்.?
- கார்த்தியை கங்குவாக்கு எதிரியாய் கனெக்ட் செய்யும் கதாபாத்திரம்