வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நந்தினி கழுத்தில் மூன்று முடிச்சு போட்ட சூர்யா.. மாதவியின் சூழ்ச்சியால் அர்ச்சனா ஆடப்போகும் ஆட்டம்

Moondru Mudichu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியல், ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்ததால் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை தக்க வைத்து விட்டது. அந்த வகையில் இனி வரும் வாரங்களில் முதல் இடத்தை நிச்சயமாக பிடித்து விடும். ஏனென்றால் ஜவ்வு மாதிரி இழுக்காமல் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சூர்யா, நந்தினி கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு விட்டார்.

இந்த ஒரு திருப்பத்தை அங்கு இருப்பவர்கள் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் இதுதான் நடக்கும் என்பதற்கு ஏற்ப மாதவி பக்கவாக சூழ்ச்சி செய்து சூர்யாவின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். அதற்கு தகுந்தவாறு கடைசி நிமிஷம் வரை மாதவி, சூர்யா நிச்சயம் நந்தினி கழுத்தில் தான் தாலி கட்டுவார் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தார்.

நீலாம்பரி போல் பழி வாங்கப் போகும் அர்ச்சனா

அதே மாதிரி சூர்யா யாரும் எதிர்பார்க்காத விதமாக நந்தினி கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அங்கு இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து விட்டார். அதிலும் அர்ச்சனா, சூர்யா நம் கழுத்தில் தான் தாலி கட்டுவார் என்ற நம்பிக்கையில் கடைசி நிமிஷம் வரை இருந்தார். இந்த ஒரு விஷயம் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அந்த குடும்பத்தையும் சரி சூர்யாவையும் சும்மா விடமாட்டேன் என்று நீலாம்பரி போல் பழி வாங்கும் எண்ணத்துடன் கிளம்பிவிட்டார்.

அதுவும் போகும்போது சும்மா போகல சுந்தரவல்லியை பார்த்து உன்னை போல தான் உன் பிள்ளையும் வளர்ந்து இருக்கிறான். உன்னையும் சும்மா விட மாட்டேன் உன் குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்று ஆவேசமாக கிளம்பி போய் விட்டார். அடுத்ததாக சுந்தரவல்லி, சூர்யா ஏதோ போதையில் தான் உன் கழுத்தில் தாலி கட்டிருப்பான் நீயே அதை கழட்டி ஏறி என்று சொல்கிறார்.

ஆனால் என்ன நடக்குது என்று தெரியாமல் அதிர்ச்சியில் நந்தினி உரைந்து போய் நிற்கிறார். அந்த நேரத்தில் சுந்தரவல்லி, நந்தினி கழுத்தில் இருக்கும் தாலியை கழட்ட சொல்கிறார். அதற்கு சூர்யா யாராலையும் கழட்ட முடியாது என்பதற்காக தான் மூன்று முடிச்சு ஸ்ட்ராங்கா போட்டு இருக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு சுந்தரவல்லி, நானே கழட்டுகிறேன் என்று நந்தினி கழுத்தில் கைய வைக்கிறார்.

ஆனால் இனி நந்தினி என் பொண்டாட்டி என் அனுமதியில்லாமல் யாரும் ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப சுந்தரவல்லி கையை தடுத்து தள்ளி விடுகிறார் சூர்யா. இனி தான் ஆட்டமே ஆரம்பம் என்பதற்கேற்ப சூர்யா, சுந்தரவல்லிக்கு நல்ல ஆப்பு வைத்து விட்டார். யார் தடுத்தாலும் இனி இவர்களை பிரிக்க முடியாது என்பதற்கு ஏற்ப சூர்யாவிற்கு பக்கபலமாக நந்தினி இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை மாற்றப் போகிறார்.

இந்த ஒரு திருப்பத்தால் அடுத்து வரும் வாரங்களில் மூன்று முடிச்சு தான் முதலிடத்தில் வரப்போகிறது. கயல் ஆரம்பித்து பல வருடங்கள் ஆன நிலையிலும் கயல் மற்றும் எழில் திருமணம் பல மாதங்களாக இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே சூர்யா மற்றும் நந்தினியின் திருமணம் அமோகமாக நடைபெற்று மக்களின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்து விட்டது.

Trending News