சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வாரணம் ஆயிரம் சூர்யா போல 10 வயது கம்மியான க்யூட்டான புகைப்படம்.. டீ-ஏஜிங் AI மிஞ்சிய நியூ லுக்

மீண்டும் எடை குறைந்து இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்கும் சூர்யாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது ஒரு ஜிவிஎம் படத்தில் நடிப்பதற்கான கெட்டப்பாக இருக்குமோ ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். சூர்யாவின் கேரியரில் பெரிய பிரேக் கொடுத்த படம் காக்க காக்க. இப்படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார்.

இப்படத்தை அடுத்து, சூர்யாவுடன் அவர் கூட்டணியில் அமைத்த 2வது படம் வாரணம் ஆயிரம் எல்லோருடைய ஆல்டைம் பேவரைட் ஆக அமைந்தது. இக்கூட்டணியில் மீண்டும் எப்போது படம் வருமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சூர்யா – ஜிவிஎம் இடையே எதோ மனஸ்தாபம் எழவே, இருவரும் பிரிந்தனர்.

கெளதம் மேனன் அடுத்து எந்த ஹீரோவை வைத்து படம் இயக்கப் போகிறார்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். அதேசமயம் அவருக்கு மார்க்கெட் டவுன், கடன் பிரச்சனைகள் இருப்பதால், அவர் பல படங்களில் நடித்ததாகவும், தற்போது விஜய்69 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா, சூர்யா44 படத்தில் நடித்து வருகிறார். வரும் நவம்பர் 14 ஆம் தேதி கங்குவா படம் ரிலீஸாகவுள்ளது. இதைத்தொடர்ந்து கவுதம் மேனன் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில் சூர்யாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. இதில் டீ ஏஜுட் கேரக்டருக்கு ஏஐ தொழில் நுட்பம் இல்லாமலேயே சூர்யாவை நடிக்க வைக்கலாம். அந்த அளவுக்கு இளமைத் தோற்றத்துடன் இருக்கிறார் என ரசிகர்கள் பேசி இந்த போட்டோஸை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், சூர்யா, ஜிவிஎம் உடனாக மனஷ்தாபத்தை கலைந்துவிட்டு, மீண்டும் அவருடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அப்படத்திற்காகத்தான் சூர்யா 8 முதல் 10 கிலோ வரை எடை குறைத்திருப்பதாகவும் இப்படமும் ஒரு ரொமாண்டிக் சப்ஜெட் என்று கூறப்படுகிறது. சூர்யா -ஜிவிஎம் கூட்டணியின் அடுத்த படம் பற்றிய அப்டேட் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Suriya
Suriya

சமீப காலமாக கவுதம் மேனன் இயக்கிய படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்த நிலையில் சூர்யாவுக்கு அவர் கேரியரில் காக்க காக்க படம் மூலம் பிரேக் கொடுத்த மாதிரி சூர்யாவும் கவுதம் மேனனுக்கு சூர்யா 45 மூலம் பிரேக் கொடுக்க ஒரு வாய்ப்பை கொடுக்க முன் வந்திருக்கலாம் எனவும் இருவரும் ஏற்கனவே முடித்துள்ள கமிட்மென்டுகளை முடித்துவிட்டு இப்படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது உண்மையானால் அடுத்து கோலிவுட்டில் ரூ.1000 கோடி வசூலுக்கு ரெடிதான் என்று தகவல் பரவி வருகிறது.

Trending News