வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா.. சைலண்டாக நடந்த மீட்டிங்

Actor Suriya: கடந்த சில மாதங்களாகவே விஜய் நடித்து வரும் லியோ படத்தைப் பற்றிய பேச்சு தான் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதையே ஓரம் கட்டும் அளவுக்கு தற்போது அவர் தன்னுடைய அரசியல் நகர்வுக்கான வேலையை செய்து வருகிறார். அதுதான் இப்போது திரையுலக வட்டாரம் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தையும் கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதன் முதல் படியாக மாணவர்களை வைத்து விஜய் நகர்த்திய காய் நன்றாகவே வேலை செய்கிறது. இப்போது விஜய்யின் அரசியல் வரவு எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் மாணவர்களை சந்தித்த நாள் அன்று விஜய் நடந்து கொண்ட முறையும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Also read: அர்ஜுனுக்கு சினிமா கேரியரை தூக்கிவிட்ட 5 படங்கள்.. அஜித் விஜய்க்கு வில்லனாக நடித்தும் குறையாத மாஸ்

இப்படி ஒரே நாளில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் தன் பக்கம் திருப்பிய விஜய் அடுத்ததாக என்ன அதிரடி காட்டப் போகிறார் என்பதை காணவும் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் சத்தமே இல்லாமல் சூர்யா செய்திருந்த ஒரு விஷயமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்பொழுதுதான் விஜய் மாணவர்களின் நலனில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார். ஆனால் இதற்கு முன்பாகவே சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி படிக்க வசதி இல்லாத மாணவ மாணவிகளுக்கு தன் சொந்த செலவில் கல்வியை கொடுத்து வந்தார். இது அப்போதே பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

Also read: அடிமடியில் கை வைத்த தளபதி.. 2026 தேர்தலுக்கு இப்பவே போட்ட அடித்தளம்

அதைத்தொடர்ந்து சூர்யாவின் அறக்கட்டளையின் மூலமாக படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று ஒரு நல்ல அந்தஸ்தில் இருக்கின்றனர். இதையெல்லாம் அவர் என்றுமே பகிரங்கமாக விளம்பரப்படுத்திக் கொண்டது கிடையாது. அப்படித்தான் தற்போது விஜய் மாணவர்களை சந்தித்த நாளன்று சூர்யாவும் தன் அறக்கட்டளையின் மூலம் படிக்கும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மீடியாவில் வைரலாகி கொண்டு இருக்கிறது. மேலும் சூர்யா தான் செய்யும் உதவியை பப்ளிசிட்டிக்காக பயன்படுத்திக் கொள்வதில்லை என்றும் அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்க்கு போட்டியாக சூர்யா நடத்திய இந்த மீட்டிங் இப்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Also read: 5000 கொடுத்து 5 கோடியை ஆட்டைய போட்டாரா தளபதி.? அரசியல் பிசினஸுக்கு நெட்டிசன்கள் பதிலடி

Trending News