திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பெரும் தலைவலியில் மாட்டிக்கொண்ட சூர்யா.. கடுமையாக எச்சரிக்க தயாரிப்பாளர்

சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான், சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் வணங்கான் திரைப்படம் சில பல பிரச்சனைகளில் சிக்கி இன்னும் சூட்டிங் முடியாமல் இழுத்துக் கொண்டு இருக்கிறது.

அதனால் சூர்யா தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டார். சமீபத்தில் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

Also read : இணையத்தில் அடித்துக்கொள்ளும் விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள்.. இப்படியெல்லாமா அசிங்கப்படுத்துறது

என்னவென்றால் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இப்போதெல்லாம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் படு சீக்ரட்டாக எடுக்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பு தளத்திலிருந்து எந்த ஒரு விஷயமும் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு செல்போனுக்கு கூட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சூர்யாவின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியிருப்பது படகு குழுவினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Also read : சூர்யாவை தூக்கியெறிந்த சங்கர்.. 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கப்போகும் பிரபல நடிகர்

இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும் போட்டோ எப்படி வெளியானது என்று தெரியாமல் சூர்யா உட்பட அனைவரும் குழப்பத்தில் இருக்கிறார்களாம். மேலும் இந்த விஷயத்தால் அதிக கோபம் அடைந்தது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். ஏனென்றால் அவர் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி இருக்கும் போது போட்டோ வெளியானதை பார்த்து அவர் ரசிகர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதாவது இனிமேல் இதுபோன்று போட்டோவை யாராவது வெளியிட்டால் அவர்கள் மீது அத்துமீறல் சட்ட பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வார்ன் செய்திருக்கிறார். இதைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் நீங்கள் முக்கிய அப்டேட் எதுவும் கொடுக்கவில்லை என்றும், போட்டோ வெளியிடக் கூடாது என்று சொல்வது நல்லா இல்லை என்றும் பதிலுக்கு அவருடன் மல்லுக்கட்டி வருகின்றனர்.

Also read : சத்தமே இல்லாமல் சூர்யா செய்யும் அநியாயம்.. வெளியில் மட்டும் போடும் காந்தி வேசம்

Trending News