வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இனி ஒரு விதி செய்வோம்.. விஜய்க்கு போட்டியாக களத்தில் குதிக்கும் சூர்யா

Suriya: நேற்று விஜய் தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தால் எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என ரசிகர்களுக்கும் தன் கட்சி நிர்வாகிகளுக்கும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும் ரசிகர்கள் நேற்றைய தினத்தை அமர்க்களப்படுத்தினர். அதில் சில அசம்பாவிதங்கள் இருந்த போதிலும் கோட் படத்திலிருந்து இரண்டாம் பாடல், சர்ப்ரைஸ் வீடியோ என வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்நிலையில் சூர்யா விஜய்க்கு போட்டியாக விரைவில் அரசியல் களத்தில் குதிப்பார் என்ற தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசுக்கு எதிராக விஜய் முதல் ஆளாக தன் கண்டனத்தை பதிவு செய்தார்.

அவரை அடுத்து பல கட்சி பிரமுகர்கள் நடிகர்கள் என அனைவரும் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவு செய்தனர். ஆனால் சூர்யா மட்டும் மௌனம் காத்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

சூர்யாவின் அரசியல்

அதையடுத்து அவர் ஆளும் கட்சியை கண்டித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அரசாங்கமே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கிறது என வெளிப்படையாகவே கண்டித்திருந்தார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது. அது மட்டும் இன்றி இந்த ஒரு அறிக்கை அவர் அரசியலுக்கு வரப்போவதை மறைமுகமாக சொல்லிவிட்டது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் சூர்யா இப்படி ஒரு எண்ணத்தில் தான் இருக்கிறார். ஏற்கனவே மாணவர்களுக்கு இவருடைய பவுண்டேஷன் மூலம் கல்வி உதவி செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து மக்கள் பணிக்காகவும் அவர் தயாராகி வருகிறார்.

விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை குறி வைத்துள்ளார். ஆனால் சூர்யா அதன் பிறகு தான் தன்னுடைய அரசியல் என்ட்ரியை கொடுக்க இருக்கிறாராம். அந்த வகையில் 2031 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இவருடைய அரசியல் வருகை இருக்கும் என கூறுகின்றனர்.

விஜய்க்கு போட்டியாக அரசியல் களத்தில் குதிக்கும் சூர்யா

Trending News