வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அக்கட தேசத்திலும் ஹிட்டடித்த சூர்யாவின் நான்கு படங்கள்.. தரமாக உருவாகி வரும் 5வது படம்

விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவரது படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சூர்யாவின் சூப்பர் ஹிட் படங்கள் மற்ற மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. அவ்வாறு மற்ற மொழியிலும் ஹிட் அடித்த சூர்யாவின் படங்களை தற்போது பார்க்கலாம்.

காக்க காக்க : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் காக்க காக்க. இப்படத்தில் அன்புச்செல்வன் ஐபிஎஸ் ஆக சூர்யா நடித்து அசத்து இருந்தார். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்து வெளியானது. பாலிவுட்டில் ஜான் ஆபிரகாம் மற்றும் ஜெனிலியா நடிப்பில் ஃபோர்ஸ் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

Also Read : அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த சூர்யா.. மாறா ஜெயிச்சுரு அவ்வளவுதான்

கஜினி : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் வித்யாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் கஜினி. இப்படத்தில் அசின், நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ஹிந்தியில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

ஆயுத எழுத்து : மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சூர்யா, சித்தார்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகி பாராட்டைப் பெற்ற படம் ஆயுத எழுத்து. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பாலிவுட்டிலும் இப்படத்தை யுவா என்ற பெயரில் மணிரத்தினம் இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜய் தேவகன், அபிஷேக் பச்சன், விவேக் ஓபராய், ராணி முகர்ஜி போன்றோர் நடித்திருந்தனர்.

Also Read : யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்.. வணங்கான், வாடிவாசல் படத்தில் சூர்யா செய்யப் போகும் சம்பவம்

சிங்கம் : ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பு மாபெரும் வெற்றியடைந்த படம் சிங்கம். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆயிடா இருந்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டது. மேலும் பாலிவுட்டில் சிங்கம் படத்தில் அஜய் தேவகன் நடித்திருந்தார்.

சூரரைப் போற்று : சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பால முரளி ஆகியோர் நடிப்பில் வெளியாகி சர்வதேச அளவில் கவனம் பெற்ற படம் சூரரைப் போற்று. இப்படத்திற்காக சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்து. இந்நிலையில் சுதா கொங்கரா அட்சயகுமாரை வைத்து பாலிவுட்டில் சூரரைப் போற்ற படத்தை இயக்கி வருகிறார்.

Also Read : சூர்யாவை தாண்டிய சுதா கொங்கரா சம்பளம்.. வாயைப் பிளக்கும் திரையுலகம்

Trending News