வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த 6 படங்கள்.. தேசிய விருதை பெற்று தந்த சூரரைப் போற்று

சூர்யா நடிகர் சிவகுமாரின் வாரிசு என சினிமாவில் சுலபமாக நுழைந்தாலும் அவர் சந்தித்த அவமானங்கள் நிறைய உண்டு. அதன் பிறகு நடனம், நடிப்பு என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு இப்போது டாப் நடிகர்களுள் ஒருவராக வளர்ச்சி அடைந்துள்ளார். அவ்வாறு சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த 6 படங்களை இப்போது பார்க்கலாம்.

ஜெய் பீம் : சூர்யா தனது 2d என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து, நடித்த படம் ஜெய் பீம். இந்த படம் ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

Also Read :தேசிய விருது மெடலை கழுத்தில் அணிந்து போஸ்.. சூர்யா ஜோதிகாவின் மகன், மகளின் புகைப்படம் வைரல்

சூரரைப் போற்று : சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி மற்றும் பல நடிப்பில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த படத்திற்கு ஐந்து தேசிய விருது கிடைத்தது.

சிங்கம் : ஹரி இயக்கத்தில் சூர்யா துரைசிங்கம் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் சிங்கம். இந்த படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது. மேலும் இப்படத்தின் வெற்றியால் சிங்கம் 2, 3 என அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட்டது.

Also Read :முதல் தேசிய விருது வாங்கிய சூர்யா, ஜோதிகா.. வைரலாகும் புகைப்படம்

அயன் : கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் அயன். சஸ்பென்ஸ் திரில்லரான இப்படம் போதைப் பொருள் திருட்டை மையமாக வைத்த எடுக்கப்பட்டிருந்தது. மேலும் அயன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது.

காக்க காக்க : கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த படம் காக்க காக்க. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். காக்க காக்க படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

நந்தா : பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நந்தா. சூர்யாவை ஹீரோ என்று அடையாளம் காட்டும் விதமாக நிலை நிறுத்திய படம் நந்தா. இந்த படத்தில் மிக சவாலான கதாபாத்திரத்தை ஏற்று தனது சிறந்த நடிப்பை சூர்யா வெளிக்காட்டி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Also Read :பெரும் தலைவலியில் மாட்டிக்கொண்ட சூர்யா.. கடுமையாக எச்சரிக்க தயாரிப்பாளர்

Trending News