வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்தடுத்து பல நூறு கோடி பட்ஜெட்டில் உருவாகும் சூர்யாவின் 6 படங்கள்.. எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரே கதாபாத்திரம்

தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக மாறிக்கொண்டிருக்கும் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து 6 படங்கள் வெளியாக உள்ளது. அதிலும் சமீபத்தில் அவரை புகழின் உச்சத்தை கொண்டு சென்ற ஒரே கதாபாத்திரம் எல்லோர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது

வாடிவாசல்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டது. நடிகர் தனுஷை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த வெற்றிமாறன் முதன்முறையாக சூர்யாவுடன் இணைகிறார்.

சூர்யா 42: இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடிக்கும் இந்த படம் 3டி முறையில் உருவாகும் சரித்திர திரைப்படம் ஆகும். இந்த படத்தில் சூர்யா அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என 5 கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

சூர்யா-சுதா கொங்கரா: கடந்த 2021 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. இந்த படம் சூர்யாவை உலக அளவில் கொண்டு சேர்த்து. இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்திருக்கிறார்.

Also Read: பாலா வேண்டாம் அவரை கூப்பிடுங்க என தஞ்சமடைந்த சூர்யா.. யாரும் எதிர்பார்க்காத அடுத்த கூட்டணி

சூர்யா-ஷங்கர்: இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ஆர் சி 15 என்னும் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். வேலையில் படுபிஸியாக இருக்கும் இவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையையும் சத்தமில்லாமல் தொடங்கி விட்டார். இம்முறை சூர்யாவை கதாநாயகனாக வைத்து இவர் சற்றே மாறுபட்டு சரித்திர கதையை படமாக்க இருக்கிறார்.

ஷங்கர் இயக்க போகும் முதல் சரித்திர திரைப்படம் இது. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ கதையை படமாக்க இருக்கிறார். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இரும்புக்கை மாயாவி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதோடு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சூர்யாவும் லோகேஷ் கனகராஜும் வேறு சில படங்களில் பிசியாக இருந்ததால் அந்தப் படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். பிறகு இப்போது மீண்டும் இந்த படம் உருவாகவதற்கான சாத்திய கூறு ஏற்பட்டிருக்கிறது.

Also Read: லோகேஷ்க்கு போட்டியாக 4 மல்டி ஸ்டார்களுடன் களமிறங்கும் ஷங்கர்.. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் வேள்பாரி

விக்ரம் 2: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் திரைப்படம் இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸை மிரள விட்டது. இதில் இரண்டே நிமிடம் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்தாலும் படத்தைப் பார்த்த அத்தனை பேரையும் மெய் சிலிர்ப்போட்டும் நடிப்பை வெளிக்காட்டினார். இதனால் விரைவில் உருவாக இருக்கும் விக்ரம் 2 படத்தில் சூர்யாவிற்கு அதிக காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இவருடைய கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே இந்த படத்தை சூர்யாவின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு இந்த 6 படங்கள் தான் அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் திரைக்கு வர இருக்கிறது. அதிலும் விக்ரம் 2 படத்தில் சூர்யாவை ரோலக்ஸ் ஆக பார்க்க அவருடைய ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர்.

Also Read: 2000 கோடி பட்ஜெட், ஆனாலும் ஷங்கர் படம் வேண்டாம்.. கண்டிஷனை பார்த்து தெறித்து ஓடிய ஹீரோக்கள்

Trending News