வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரெடியாகும் நஷ்டத்தை ஏற்படுத்திய சூர்யா படத்தின் 2 ஆம் பாகம்.. கங்குவா மறுத்ததால் கவினுக்கு அடித்த ஜாக்பாட்

Surya Big loss 2nd part Movie: சூர்யா கடந்த ஒரு வருடங்களாக கங்குவா படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா எந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை. அதுவும் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படம். ஜெய் பீம் படத்துக்கு பிறகு சொல்லிக் கொள்ளும் படி அவருக்கு ஹிட் படங்கள் அமையவில்லை.

விக்ரம் மற்றும் நம்பி எஃபெக்ட் படங்களில் கெஸ்ட் ரோல் பண்ணினாலும் இவர் ஹீரோவாக நடித்த கடைசி படம் எதற்கும் துணிந்தவன் தான். கடந்த இரண்டு வருடங்களாக கங்குவா படத்திற்காக தன்னை தயார்படுத்தி நடத்தி வருகிறார்.

கங்குவா படம் சூர்யாவிற்கு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று அந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா கூறுகிறார். மேலும் கங்குவா படக் குழுவில் உள்ள அனைவரும் இயக்குனர் சிறுத்தை சிவாக்கு, இந்த பெயர் விலகி கங்குவா சிவா என்ற பெயர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனக் கூறி வருகின்றனர்.

அந்த அளவுக்கு கங்குவா படம் செம சூப்பராக வந்திருக்கிறதாம். அதன் டிரைலர் வெளியாகி சக்கை போடு போட்டது. கங்குவாவாக சூர்யா மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குவா மறுத்ததால் கவினுக்கு அடித்த ஜாக்பாட்

இந்நிலையில் சூர்யா நடித்து கலவையான விமர்சனங்களை பெற்று, வசூல் ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்திய படம் “ஜில்லுனு ஒரு காதல்”. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்தின் நஷ்டத்தை சரி கட்டத் தான் பருத்திவீரன் படம் எடுக்கப்பட்டது.

ஜில்லுனு ஒரு காதல் படம் பாட்டுக்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் பூமிகா, ஜோதிகா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க மறுத்துவிட்டார். இவருக்கு பதிலாக வளரும் ஹீரோ கவின் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்

Trending News