வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

600 கோடிகளுக்கு வொர்த் இல்லாததால் கழட்டி விடப்பட்ட சூர்யா.. மும்பையை காலி பண்ண நேரம் பார்க்கும் மாறன்

Suriya: வணங்கான் படம் டிராப்புக்கு பின் சூர்யா தமிழ் படங்கலே வேண்டாம் என்று ஒரு முடிவில் இருப்பதாக தெரிகிறது. இப்பொழுது மும்பையில் தான் வசித்து வருகிறார். ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். சூர்யாவின் குழந்தைகள் மும்பையில் தான் படித்து வருகிறார்கள். அவர்களை சந்திக்கவும், படத்தில் நடிக்கவும் மொத்தமாய் மும்பை வாசியாக மாறிவிட்டார்.

தற்சமயம் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா கேரியரிலேயே மிகப் பிரம்மாண்ட செலவில் எடுக்கப்படும் படம் இது. கங்குவார படம் இதுவரை 400 கோடி ரூபாய் செலவு வைத்துள்ளது.

இந்த படம் ஒரு பீரியாடிக் படமாக உருவாக்கப்படுகிறது.ஆனால் படக்குழுவினர் ஒரு போஷன் மட்டும்தான் அப்படி உருவாகி வருகிறது என தெரிவித்துள்ளனர். மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும் கதை தான் கங்குவா படம் என்றும் கூறி வருகின்றனர்.

மும்பையை காலி பண்ண நேரம் பார்க்கும் மாறன்

கங்குவா படத்திற்கு பின்னர் சூர்யா 2 ஹிந்தி படங்களில் நடிக்கப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இப்பொழுது அந்த இரண்டு படங்களுமே டிராப் ஆகிவிட்டதாம். சூர்யா நடிப்பதாக இருந்த கர்ணா என்னும் ஹிந்தி படம் கிட்டத்தட்ட 600 கோடி செலவில் எடுப்பதாக பிளான் பண்ணினார்கள்.

ஆனால் ஒரு தென்னிந்திய நடிகரை வைத்து 600 கோடியில் எடுக்கப்பட்ட படத்தை அங்கே வியாபாரம் செய்ய முடியுமா என்பது அவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால் இந்த படத்தை ட்ராப் செய்யும் முடிவில் இருக்கிறார்கள் குழுவினர். இதனால் சூர்யா மிகவும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. கூடிய விரைவில் மும்பையை காலி பண்ணவும் யோசித்து வருகிறாராம் சூர்யா.

Trending News