சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சூர்யாவின் கங்குவா படத்தின் அப்டேட்.. வைரலாகும் குரூப் புகைப்படம்

Actor Surya In Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் ரசிகர்களிடம் அதிக ஹைப்பை ஏற்படுத்தும் விதமாக மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் சூர்யாக்கு ஜோடியாக திசா பதானி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, ரெடீன் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், நடராஜ் சுப்ரமணியன், பாபி தியால் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அத்துடன் 3d அனிமேஷனில், கிட்டத்தட்ட 10 மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள்.

Also read: ரகசிய சந்திப்பால் கோபத்தில் சூர்யா.. விஜய் மேனேஜர் ஜெகதீஷ் செய்யும் அழிச்சாட்டியம்

மேலும் இப்படம் வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பிளாஸ் பேக் காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. அத்துடன் தற்போது ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என்ற பகுதியில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.

அதில் சூர்யா மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் சம்பந்தப்பட்ட சண்டை காட்சிகள் நிறைவு பெற்றிருக்கிறது. இதனை அடுத்து படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடுவதற்கு மொத்த டீமும் சேர்ந்து குரூப் புகைப்படத்தை எடுத்து அதை இணையதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

Also read: பாலாவை தொடர்ந்து வெற்றிமாறனுக்கும் கம்பி நீட்டிய சூர்யா.. தெள்ளத் தெளிவாக ரோலக்ஸ் ஆடப்போகும் ஆட்டம்

மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எப்படியும் இந்த ஆண்டுக்குள் படப்பிடிப்பு முழுமையாக முடித்து விட வேண்டும் என்று அனைவரும் தீயாய் வேலை பார்த்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து இப்படத்திற்கு வரும் சின்ன சின்ன நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இப்படத்தை கண்ணும் கருத்துமாய் இயக்குனர் சிறுத்தை சிவா எடுத்து வருகிறார். அதற்கு காரணம் இவர் ரஜினியை வைத்து எடுத்த அண்ணாத்த படம் விமர்சன ரீதியாக அடிவாங்கிதால் மிகவும் கவனமாக கங்குவா படத்தை எடுத்து வருகிறார். அந்த வகையில் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குவா படத்தின் மொத்த டீம்

kanguva
kanguva

Also read: 69வது தேசிய விருது சூர்யா மகுடம் சூடுவாரா.? டஃப் கொடுத்திருக்கும் ரெண்டு டாப் ஹீரோக்கள்

Trending News