வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

2000 கோடினு வடை சுட்ட தயாரிப்பாளர்.. கங்குவா முதல் நாள் கலெக்ஷன்

Kanguva First Day Collection : நேற்றைய தினம் சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்து எகாத்துக் கொண்டிருந்த கங்குவா படம் தியேட்டரில் வெளியாகி இருந்தது. இதுவரை சூர்யா படங்களுக்கு இல்லாத எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்தது. காரணம் கங்குவா படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்த நிலையில் ப்ரோமோஷன் படு பயங்கரமாக செய்திருந்தனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறும் என பலர் கூறி வந்தனர். அதோடு இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கீரின் ஞானவேல் ராஜா கங்குவா படம் கண்டிப்பாக 2000 கோடி வசூல் செய்யும் என்று கூறியிருந்தார்.

அவையெல்லாம் பொய்யாக்கும் படி நேற்று படம் வெளியான நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் மேக்கிங் மற்றும் இசை படுமோசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். படம் முழுக்க சத்தமாக இருப்பதாகவும், எரிச்சலை உண்டாக்குகிறது என்றும் கூறியிருக்கின்றனர்.

கங்குவா முதல் நாள் கலெக்ஷன்

சூர்யாவின் கேரியேரில் முக்கியமான படமாக பார்க்கப்படும் கங்குவா படத்தின் நிலைமைய இப்படியா என சூர்யா ரசிகர்களை வருத்தப்படும் அளவுக்கு இருந்தது. இதில் அண்ணனுக்கு உதவுவதற்காக நடிகர் கார்த்தியும் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்.

கங்குவா படத்தின் முதல் நாள் கலெக்ஷன் இந்தியாவை பொருத்தவரையில் 22 கோடி வசூல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 11.45 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. உலகம் முழுவதும் 40.2 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படக்குழு விரைவில் கங்குவா படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். அதோடு சூர்யாவின் சிங்கம் படத்தின் வசூலை கங்குவா படம் முறியடித்திருக்கிறது. ஆனாலும் 2000 கோடி வசூல் எல்லாம் இப்படம் பெறுமா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான்.

Trending News