கங்குவா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, வசூல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 320 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது கங்குவா.
ஆனால் 110 கோடி வரை தான் வசூல் செய்ய முடிந்தது. சூர்யா மற்றும் சிறுத்தை சிவாவின் கேரியரில் இது போன்ற தவறான விமர்சனங்களை பார்த்தது கூட இல்லை அந்த அளவிற்கு கங்குவாவை வச்சு செஞ்சாங்க!
இதுக்கு ஒரு சில சோசியல் மீடியா காசு வாங்கிட்டு கூட செஞ்சதா கேள்விப்பட்டோம், ஆனால் இப்போ அதை எல்லாம் தாண்டி சூர்யாக்கு உலகளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதாவது கங்குவா ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 97வது ஆஸ்கர் விருதுகளில் தகுதி பட்டியலில் சூர்யா-வின் கங்குவா இடம்பெற்றுள்ளது.
மொத்தமா 323 படங்களில் 207 படங்கள் தகுதியான பட்டியலுக்கு சிறுத்தை சிவாவின் கங்குவா தேர்வாகியுள்ளது. இந்த விருதுக்கு தகுதியான படமா? இல்லையா? என்பதை ஆஸ்கர் குழு இறுதி முடிவு செய்யும்.
ஜெயிச்சாலும் தோத்தாலும் களத்தில் நிற்கிறோம் என்பதை கொண்டாடி வருகின்றன சூர்யாவின் ரசிகர்கள். இதற்கு பின் ரெட்ரோ, சூர்யா-45 ஆகிய படங்கள் அதிக எதிர்பார்ப்பு கிளப்பியுள்ளது.