வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹாலிவுட் தரத்தில் அஜித்துடன் மோத தயாராகும் கங்குவா.. பயத்தை காட்ட ரிலீஸ் தேதியை லாக் செய்த சூர்யா

Kanguva: சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா கடந்த சில வருடங்களாக உருவாகி வருகிறது. 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்காக சூர்யாவின் ரசிகர்கள் நெடுங்காலமாக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கு இடையில் படத்திலிருந்து வெளிவந்த ஃகிளிம்ஸ் காட்சிகள், போஸ்டர்கள் என அனைத்தும் படு மிரட்டலாக இருந்தது. அதிலும் சூர்யா இதில் இரண்டு கெட்டப்புகளில் வருவது கூடுதல் சர்ப்ரைஸ் ஆக அமைந்தது.

மேலும் படத்தின் பிரீ பிசினஸ் பொருத்தவரையில் டிஜிட்டல், சாட்டிலைட், ஆடியோ உரிமம் என அனைத்தும் 500 கோடிகளுக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. இதில் அமேசான் ப்ரைம் 80 கோடிகளை கொடுத்து டிஜிட்டல் உரிமையை வாங்கி இருக்கிறது.

அஜித்துடன் போட்டி போடும் சூர்யா

அதேபோல் ஹிந்தி உரிமம் 100 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. அதனாலேயே நிச்சயம் இப்படம் ஆயிரம் கோடியை தட்டி தூக்கும் என பேசப்படுகிறது. இந்நிலையில் கங்குவா படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவல் கசிந்து உள்ளது.

தற்போது படத்தின் இறுதி கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த வருட தீபாவளிக்கு கங்குவா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் அஜித்தின் விடாமுயற்சியும் வெளிவரும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

அந்த வகையில் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உருவாகி இருக்கும் கங்குவா விடாமுயற்சியுடன் மோத தயாராகிவிட்டது. ஆனால் இரண்டு படங்களும் ஒரே நாளில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இரண்டு நாள் இடைவெளியில் படங்கள் வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இருப்பினும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் வரை நாம் காத்திருக்க தான் வேண்டும். மேலும் சூர்யாவுக்கு சிறுத்தை சிவாவின் திறமை பிடித்திருப்பதால் மீண்டும் அவர்கள் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது நெருங்கிய வட்டாரம்.

ரிலீசுக்கு தயாராகும் சூர்யாவின் கங்குவா

Trending News