Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பான் வேர்ல்ட் ஸ்டாராக மாறிய சூர்யா.. கங்குவா எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

பான் வேர்ல்ட் ஸ்டாராக மாறிய சூர்யா.. கங்குவா எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Kanguva Twitter Review: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா பெரும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள கங்குவா இன்று ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது. சில தடைகளை கடந்து ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ள படம் எப்படி இருக்கிறது என படத்தை பார்த்தவர்கள் […]

Kanguva Twitter Review: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா பெரும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள கங்குவா இன்று ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது. சில தடைகளை கடந்து ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ள படம் எப்படி இருக்கிறது என படத்தை பார்த்தவர்கள் விமர்சனத்தை கொடுத்துள்ளனர்.

kanguva-suriiya
kanguva-suriiya

அதன்படி சோசியல் மீடியாவில் பரவி வரும் கங்குவா ரிவ்யூ பற்றி இங்கு காண்போம் இதில் படத்தை பார்த்த அனைத்து ரசிகர்களும் சூர்யாவை ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

kanguva-suriiya
kanguva-suriiya

சண்டைக் காட்சியில் தொடங்கி ஒவ்வொரு சீனும் பிரம்மாண்டத்தின் உச்சத்தை காட்டி இருக்கிறது. அதிலும் சூர்யா பீரியட் போர்ஷனில் வேற லெவலில் மிரட்டி தள்ளி இருக்கிறார். அதை தியேட்டரில் பார்த்தால் மட்டும்தான் உணர முடியும்.

kanguva-suriiya
kanguva-suriiya

அதேபோல் மேக்கப், ஆர்ட் வொர்க், இசை என எதிலும் குறை சொல்ல முடியவில்லை. திரைக்கதையில் தொடங்கி அதை சரியாக நகர்த்தைச் சென்றது வரை சிறுத்தை சிவா ஸ்கோர் செய்துள்ளார்.

kanguva-suriiya
kanguva-suriiya

நிகழ்கால போர்ஷன் என்ஜாய் செய்யும் வகையிலும் பீரியட் காட்சிகள் மிரள வைக்கும் வாயிலும் இருக்கிறது. 38 மொழிகளில் வெளியாகி உள்ள இப்படம் மூலம் சூர்யா தற்போது பான் வேர்ல்ட் ஸ்டார் ஆக மாறி இருக்கிறார்.

kanguva-suriiya
kanguva-suriiya

மேலும் பாகுபலி, KGF போன்ற படங்களை மிஞ்சும் வகையில் கங்குவா உள்ளதாக ரசிகர்கள் புகழாரம் சூடி வருகின்றனர். ஆக மொத்தம் ஆயிரம் கோடி என்ற இலக்கை கங்குவா தட்டுமா? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.