வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ராஜமௌலிக்கே ஆப்படிக்க வரும் 1000 கோடி பட்ஜெட் படம்.. சூர்யாவின் அடுத்த பிரம்மாண்டம்

Actor Surya: சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் மிகவும் பிசியாக இருக்கிறார். 3டி தொழில்நுட்பம் கொண்டு பத்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் இப்படத்திற்காக சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க அவருடைய வாடிவாசல் படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற ஆவலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது சூர்யாவை தேடி அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள் படையெடுத்து வந்து கொண்டிருக்கிறதாம். அதில் பல முன்னணி இயக்குனர்களும் அவருக்கு வலைவீசி கொண்டிருக்கின்றனர்.

Also read: வருமா வராதா வாடிவாசல்.? வெறுத்துப்போன சூர்யா.. சண்டை இயக்குனருடன் மீண்டும் போடும் கூட்டணி

ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் வேள்பாரி படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் மற்றொரு இயக்குனர் ஒருவர் முந்திக்கொண்டு சூர்யாவை வளைத்து பிடித்து இருக்கிறாராம்.

அந்த வகையில் டெல்லி 6, மிர்ஸ்யா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மேரா சூர்யாவை வைத்து பிரம்மாண்டமான படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இது குறித்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரலாற்று படமாக உருவாக இருக்கிறது என்ற தகவலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: பல கோடிகளில் புரளும் முதல் 8 நடிகர்கள்.. சூர்யாவை விட அதிக சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்

மேலும் இந்த சரித்திர படத்தில் சூர்யா கர்ணன் கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். இரண்டு பாகங்களாக வெளிவர திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்திற்காக ஆயிரம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது ராஜமௌலிக்கே ஆப்படிக்கும் வகையில் இப்படம் உருவாகும் என்று தெரிகிறது. அது மட்டுமின்றி பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் வேள்பாரி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தான் சூர்யாவை நடிக்க வைக்க அவர் முடிவு செய்திருந்தார். ஆனால் அவர் இந்த பேச்சுவார்த்தையை தொடங்கும் முன்பே பாலிவுட் இயக்குனர் முந்தி கொண்டார். ஆனாலும் சூர்யா சங்கருக்கு நோ சொல்ல மாட்டார். அப்படிப் பார்த்தால் சூர்யா பிரம்மாண்ட நாயகன் என்ற பெயரை தட்டிச் செல்வார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

Also read: வெறுப்பின் உச்சத்தில் இருந்த சூர்யா.. ஒரு சம்பவத்தை சொல்லி குளிர வச்ச தேசியவிருது இயக்குனர்

Trending News