சூர்யாவின் அடுத்த முயற்சி.. வில்லனா சண்ட செய்ய போகும் ட்ரெண்டிங் வில்லன்

Surya : தனது இளமையாலும் நடிப்பு திறமையாலும் இன்று வரையிலும் சினிமா துறையில் கொடி கட்டி பறக்கும் நடிகர் சூர்யா. ரசிகர்களை பெரும்பாலும் ஈர்த்தது சூர்யாவின் போலீஸ் கெட்டப் தான்.

தொடர்ந்து தோல்வி..

அவ்வளவு வெற்றிகளுக்குப் பிறகு, சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் செல்வாக்கைப் பெறவில்லை. சூர்யாவின் 2014-ல் வெளியான ‘அஞ்சான்’ படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. என்.லிங்குசாமி இயக்கத்தில் உருவான இந்த படம், மாஸ், ஆக்ஷன், சண்டை, ஸ்டைல் என எல்லாம் இருந்தாலும், படத்தின் கதைக்களமும், screenplay-லும் பெரும் விமர்சனங்களை சந்தித்தது.

விசுவாசமான ரசிகர்களுக்கும் ஏமாற்றம் தான். பெரும் ஹைபில் வந்த படம் – தோல்வியில் முடிந்தது. அதற்குப் பிறகு ‘7ஆம் அறிவு’ (2011). ஏ.ஆர். முருகதாஸ் – சூர்யா கூட்டணியில் வந்த படம்.
இந்த படத்திலும் புதுமையான – போதிதர்மன் பின்னணி,
ஆனால் சிக்கலான விஞ்ஞானக் கதையை, ரசிகர்களுக்குப் புரியும்படி சொல்ல முடியவில்லை.

கலவையான விமர்சனங்களுடன், படம் பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக முடிந்தது. மேலும் ‘மாற்றான்’, ‘மாஸ்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘எதற்கும் துணிந்தவன்‘ போன்ற படங்களும்
சில பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் – சராசரி அல்லது தோல்வி எனவே முடிந்தன.

சூர்யாவின் அடுத்த முயற்சி..

இப்பொழுது அதனை எல்லாம் தாண்டி, சூர்யா மீண்டும் போலீஸ் வேடத்தில் நுழைகிறார். ஆனால் இது பழைய பாணி இல்லை.

ஜித்து மாதவன் இயக்கி, வி. கிரியேஷன் தயாரிப்பில் #Surya47 ரசிகர்களிடம் மாஸ் வெறித்தனத்தை கொடுக்க தயாராக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யா இந்த கதையை தான் கேட்டதாகவும், இது ஒரு “பைத்தியக்கார போலீஸ்” வேடம் எனவும் பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருக்கிறது.அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே ரசிகர்கள் ஏற்கனவே ட்ரெண்ட் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →